இந்திய பங்குச்சந்தை நேற்று அடைந்த ஏற்றத்தை தொடர்ந்து, இன்றும் இரண்டாவது நாளாக உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது. இருப்பினும், இந்த உயர்வு சிறிய அளவில் மட்டுமே இருப்பதால், முதலீட்டாளர்கள் மத்தியில் மதியத்திற்கு மேல் சந்தை சரிந்துவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 100 புள்ளிகள் உயர்ந்து 80,466 என்ற நிலையில் வர்த்தகமாகிறது.
தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 22 புள்ளிகள் உயர்ந்து 24,645 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
இன்றைய வர்த்தகத்தில், சில முக்கியப் பங்குகள் மட்டுமே ஏற்றம் கண்டுள்ளன. அவை:
பஜாஜ் ஃபைனான்ஸ்
பாரதி ஏர்டெல்
ஹெச்டிஎப்சி வங்கி
ஹிந்துஸ்தான் யூனிலீவர்
டாடா ஸ்டீல்
அதே நேரத்தில், பெரும்பாலான முக்கிய நிறுவனங்களின் பங்குகள் சரிவில் வர்த்தகமாகின்றன. அவை:
ஏசியன் பெயின்ட்ஸ்
அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ்
டாக்டர் ரெட்டி
ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ்
ஹீரோ மோட்டோகார்ப்
ஐ.டி.சி.
இன்டஸ்இண்ட் வங்கி
ஜியோ ஃபைனான்சியல்
ஸ்டேட் வங்கி
டாடா மோட்டார்ஸ்