இந்தியா பங்குச் சந்தை இந்த வாரம் நான்கு நாட்களிலும் ஏற்றத்தில் இருந்த நிலையில், இன்று திடீரென சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கியது முதலே சரிவில்தான் வர்த்தகமாகி வருகிறது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 532 புள்ளிகள் சரிந்து 81,464 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதைப்போல், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 166 புள்ளிகள் சரிந்து 24,918 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச் சந்தையில் பஜாஜ் பைனான்ஸ், பாரதி, டாக்டர் ரெட்டி, இண்டஸ் இன் வங்கி, ஜியோ பைனான்ஸ், மகேந்திரா, மாருதி, சன் பார்மா, ட்ரெண்ட் உள்ளிட்ட ஒரு சில பங்குகள் மட்டுமே உயர்ந்துள்ளது. மற்ற அனைத்து நிஃப்டி பங்குகளும் சரிவில் வர்த்தகமாகி வருகின்றன.