அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்திய இறக்குமதி பொருட்கள் மீது 50% வரி விதித்ததால், இந்தியப் பங்குச்சந்தை கடுமையான சரிவை சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த வாரம் ஓரளவு சரிவடைந்த பங்குச்சந்தை, இந்த வாரம் மீண்டும் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது.
நேற்று சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த நிலையில், இன்றும் பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 90 புள்ளிகள் உயர்ந்து, 80,692 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 28 புள்ளிகள் உயர்ந்து 24,000 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகின்றன.
இன்றைய வர்த்தகத்தில், ஆசியன் பெயின்ட்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, சிப்லா, பார்தி ஏர்டெல், ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ், ஹீரோ மோட்டார்ஸ், இண்டஸ்இண்ட் வங்கி, இன்ஃபோசிஸ், ஐ.டி.சி., மாருதி சுசுகி, ஸ்டேட் வங்கி, சன் பார்மா, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், டி.சி.எஸ்., டெக் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளன.
அதேபோல் அப்போலோ ஹாஸ்பிடல், பஜாஜ் ஃபைனான்ஸ், டாக்டர் ரெட்டி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி, ஸ்ரீராம் ஃபைனான்ஸ் உள்ளிட்ட சில நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன.
ட்ரம்ப்பின் வரிவிதிப்பு குறித்த கவலைகளுக்கு மத்தியிலும், இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது என்ற நம்பிக்கையை முதலீட்டாளர்களுக்கு இந்த ஏற்றம் அளித்துள்ளது.