உள்நாட்டு பங்குச் சந்தைகளில் காணப்பட்ட சாதகமான போக்கும், உலகளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததும் காரணமாக, இன்று அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ.86.44 ஆக முடிந்தது.
அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வட்டி விகித முடிவுக்கு முன்பாக, டாலர் மதிப்பு உயர்ந்துள்ளதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், ரூபாய் இன்று ரூ.86.60 என்ற மதிப்பில் தொடங்கியது. பின்னர் அதிகபட்சமாக ரூ.86.43 ஐ எட்டியதும், குறைந்தபட்சமாக ரூ.86.68 வரை சென்றதும் பதிவாகியுள்ளது. இறுதியில், 12 காசுகள் உயர்வுடன் ரூபாய் ரூ.86.44 ஆக முடிந்தது.
இதற்கு முன், நேற்று (செவ்வாய்க்கிழமை), ரூபாய் 26 காசுகள் உயர்ந்து ரூ.86.55 ஆக முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.