தினமும் காலையில் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வரும் நிலையில், இன்று ஒரே நாளில் இரண்டு முறை விலை உயர்ந்தது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.76,000-ஐ தாண்டியுள்ளது.
இன்று காலை நிலவரப்படி, ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.65 உயர்ந்து ரூ.9,470 ஆகவும், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.520 உயர்ந்து ரூ.75,760 ஆகவும் விற்பனையானது. இந்த விலை உயர்வு, மக்களின் வாங்கும் திறனை பாதிக்கும் என அஞ்சப்பட்ட நிலையில், மாலையில் மேலும் ஒருமுறை விலை உயர்ந்தது.
இரண்டாவது முறையாக மாலை நிலவரப்படி, ஒரு சவரன் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.520 அதிகரித்து, இன்று ஒரே நாளில் மொத்தம் ரூ.1,040 உயர்ந்துள்ளது. இதன் மூலம், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.76,280-க்கு விற்பனையாகி வருகிறது.
ஒரே நாளில் ஏற்பட்ட இந்த திடீர் விலை ஏற்றம், தங்கத்தின் மீதான முதலீடுகள் மற்றும் அதன் சந்தை நிலைத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.