தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் ஒரு கிராமுக்கு ரூ.50 மற்றும் ஒரு சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. இது நகை வாங்க திட்டமிட்டிருந்த பொதுமக்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் விலை உயர்ந்தாலும், வெள்ளி விலை இன்று ஒரு கிலோவுக்கு 1000 ரூபாய் குறைந்துள்ளது. இது வெள்ளி வாங்க விரும்பும் மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
இன்றைய நிலவரப்படி, சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறித்த விவரங்கள் பின்வருமாறு:
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,305
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: 9,355
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 74,440
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 74,840
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 10,150
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 10,205
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 81,200
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 81,640
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.130.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.130,000.00