தங்கம் விலை எந்த அளவுக்கு உயர்ந்து கொண்டே சென்றதோ, அதே அளவுக்கு தற்போது குறைந்து கொண்டே வருவதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த இருபதாம் தேதி, தங்கம் ஒரு சவரன் 66,480 ரூபாயில் விற்பனையானது. இன்று 65,480 ரூபாயாக குறைந்து, 1,000 ரூபாய் வீழ்ச்சி கண்டுள்ளது. இது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இதனை அடுத்து, தங்கம் விலை இன்னும் குறையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்த நிலையில், தங்கம் விலையில் மாற்றம் இருந்தாலும், வெள்ளி விலை எந்த விதமான மாற்றமும் இன்றி ஒரே நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது, சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து ரூபாய் 8,185 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 240 சென்னையில் ரூபாய் 65,480 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 8,929 எனவும் ஒரு சவரன் ரூபாய் 71,432 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 110.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 110,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது