சென்னையில் தங்கத்தின் விலையில் கடந்த 3 நாட்களாக ஏற்பட்ட தொடர் உயர்வுக்கு பிறகு, இன்று சவரனுக்கு ரூ.200 குறைந்திருப்பது வாடிக்கையாளர்களுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது. கடந்த சில நாட்களாக, தங்கத்தின் விலை ரூ.75,000-ஐத் தாண்டி புதிய உச்சத்தை தொட்டது.
நேற்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.9,470-க்கு விற்கப்பட்டது. ஒரு சவரன் ரூ.75,760ஆக இருந்தது. மூன்று நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலையில், இன்று சிறிது மாற்றம் தென்படுகிறது.
இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.25 குறைந்து ரூ.9,445-க்கு விற்பனையாகிறது. இதனால், ஒரு சவரன் தங்கம் ரூ.75,560-ஆக சரிந்துள்ளது. 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.10,303 என்றும் வெள்ளி விலை ஒரு கிலோ ரூ.127,000 எனவும் விற்பனையாகி வருகிறது.
இன்றைய விலை சரிவு தற்காலிகமானதாக இருக்கலாம் என்றும், வரும் நாட்களில் மீண்டும் விலை உயர வாய்ப்புள்ளது என்றும் தங்க வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.