கடந்த ஒரே வாரத்தில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்துள்ளது, நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியையும், முதலீட்டாளர்களுக்கு பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி ஒரு சவரன் ரூ.75,200 ஆக விற்பனையாகி வந்த நிலையில், தற்போது அதன் விலை ரூ.74,240 ஆக குறைந்துள்ளது.
இந்த திடீர் விலை சரிவுக்குப் பிறகு, தங்கம் இன்னும் விலை குறைய வாய்ப்பிருப்பதாக நகைக்கடை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இது தங்கம் வாங்கத் திட்டமிட்டிருப்பவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்று கருதப்படுகிறது.
சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலையின் நிலவரங்கள் பின்வருமாறு:
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,290
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,280
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 74,320
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 74,240
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 10,134
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 10,123
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 81,072
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 80,984
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.127.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.127,000.00