முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று சுதந்திர தின உரையில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து சுருக்கமாக பார்ப்போம்.
மத்திய அரசின் வளர்ச்சியை காட்டிலும் தமிழ்நாட்டின் வளர்ச்சி அதிகம்
விடுதலை போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் ரூ.22 ஆயிரமாக உயர்த்தப்படும்.
விடுதலை போராட்ட தியாகிகள் குடும்ப ஓய்வூதியம் ரூ.12 ஆயிரமாக உயர்த்தப்படும்.
தமிழ்நாட்டின் மலைப்பகுதிகளில் கட்டணமில்லா விடியல் பயணத்திட்டம் மாற்றுத் திறனாளிகளுக்கு விரிவுபடுத்தப்படும்.
சுதந்திர போராட்டத்தை பெருமைபடுத்தும் ஏராளமான நினைவுச் சின்னங்கள் தி.மு.க ஆட்சியில் அமைக்கப்பட்டன.
மத்திய அரசின் வளர்ச்சியை காட்டிலும் தமிழ்நாட்டின் வளர்ச்சி அதிகமாக உள்ளது.
நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான குறியீட்டில் தமிழ்நாடு 788 புள்ளிகளுடன் இந்தியாவில் 2வது இடத்தில் உள்ளது.
சமூக முன்னேற்றக் குறியீடுகளில் பெரிய மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாடு 63.33 புள்ளிகள் பெற்று தேசிய அளவில் முதலிடம்.
தமிழகத்தில் 1.43 சதவீத மக்கள் தான் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளனர்.
ரூ.10 லட்சம் கோடி முதலீடுகள் பெற்று 30 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கியுள்ளோம்.
ஸ்டார்ட் அப் தரவரிசை பட்டியலில் பெஸ்ட் பெர்ஃபார்மர்-ஆக தமிழகம் உள்ளது.
ஏற்றுமதியில் இந்தியாவிலேயே 80.89 புள்ளிகளுடன் தமிழகம் முதலிடம்.