அழகின் அழகு - தமிழச்சி தங்கப்பாண்டியன்

சனி, 23 மார்ச் 2019 (13:32 IST)
தங்கப்பாண்டியன்களை தகப்பனாய்ப் பெற்ற தமிழச்சிகள் எல்லாம் அழகே !
 
இலக்கியம், பேராசிரியர், ஆராய்ச்சி, நடனம், நாடகம் என ஆளுமைகள் பலப்பெற்ற சுமதிகள் எல்லாம் அழகின் அழகே !
 
 
மல்லாங்கிணற்றில் பிறந்து, பகுத்தறிவையும், புரட்சிகளையும், காதலையும் 
பார் பேசும் தமிழச்சிகள் எல்லாம் அழகின் அழகே !
 
 
சொல் தொடும் தூரத்தில் நம் அருகில் உள்ள 
வனப்பேச்சிக்கள் எல்லாம் அழகின் அழகே !
 
 
தென்னரசுகளை சகோதரர்களாய்ப் பெற்ற தமிழச்சிகள் எல்லாம் அழகின் அழகே !
 
 
காற்று கடிதங்களை மட்டும் கொணரவில்லை, 
இரவை பகலாக்கி மாயம் செய்யும் மாயக்காரிகள்
தகவல் தொழில்நுட்ப மச்சனதிகள் எல்லாம் அழகின் அழகே !
 
 
இரண்டுப்பெண் மக்களைப் பெற்றாலும், அகவை ஜம்பத்தைத் தொட்டாலும்
தாய் எப்படி அழகோ ? அப்படியே தமிழச்சிகளும் எல்லாம் அழகின் அழகே !
 
 
திருக்கடையூர் ஸ்ரீஅமிர்தகடேசுவரரின் மனையாள் அபிராமி கிழவி என்றால் 
தமிழச்சிகளும் கிழவிகளே !
 
 
யார் சொன்னது ? பெண்ணின் அழகு 
நிறத்திலும், தோல் சுருக்கத்திலும் உள்ளது என்று ?
தமிழச்சிகள் மட்டும் அல்ல நம் அப்பத்தாள்களும் அழகின் அழகே !
 
 
குடும்பத்தின் பாரம் சுமக்கும் 
நம் சோட்டுப் பெண்கள் அனைவரும் அழகின் அழகே !
இரா காஜா பந்தா நவாஸ்
[email protected]
 
 
 
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் பாஜகவிற்கு ரூ. 1800 கோடி கைமாறியதா? வெளியான அதிர்ச்சி தகவல்