Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் காங்கிரஸ் - பாஜக நேரடியாக மோதும் இரு தொகுதிகள்... வெற்றி யாருக்கு?

Advertiesment
தமிழகம்
, சனி, 23 மார்ச் 2019 (08:37 IST)
சிவகங்கை மற்றும் கன்னியாகுமரியில் பாஜக காங்கிரஸ் நேரடியாக மோதுவதால் இவ்விரு தொகுதிகள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
 
தமிழகத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ் திமுக கூட்டணியில் இடம்பெற்று 10 தொகுதிகளைப் பெற்றுள்ளது. அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக 5 தொகுதிகளை மட்டும் பெற்றுள்ளது. இரு கட்சிகளும் போட்டியிட இருக்கும் தொகுதிகளின் பட்டியல் வெளியாகியது.

அதன்படி சிவகங்கை, கன்னியாகுமரி தொகுதியில் இவ்விரு கட்சிகள் நேரடியாக மோதிக்கொள்கின்றன. கன்னியாகுமரியில் பாஜக சார்பில் பொன் ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். காங்கிரஸ் சார்பில் எச் வசந்தகுமார் போட்டியிட இருக்கிறார்.
 
 
கன்னியாகுமரியை பொறுத்தவரையில் முன்னர் காங்கிரஸ் பலமாக இருந்தது. பின்னர் திமுக, பாஜக, கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு மவுசு அதிகரித்தது. ஆனால் பொன் ராதாகிருஷ்ணன் ஆகட்டும் சரி எச்.வசந்தகுமார் ஆகட்டும் சரி இருவருமே பலமான வேட்பாளர்கள் தான். இருவருக்குமே தொகுதியில் நல்ல செல்வாக்கு உள்ளது. ஆகவே இதில் யார் வெற்றிபெறப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.
 
சிவகங்கையை பொறுத்தவரை பாஜக சார்பில் எச்.ராஜா போட்டியிடுகிறார். காங்கிரஸ் தரப்பிலிருந்து இந்த தொகுதிக்கு இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நள்ளிரவில் வெளியான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல். யாராருக்கு எந்தெந்த தொகுதி? விவரம் உள்ளே!!