Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் இனி 20 ரூபாய் டோக்கன் சிஸ்டம் எடுபடாது ?

தமிழகத்தில் இனி 20 ரூபாய் டோக்கன் சிஸ்டம் எடுபடாது ?
, செவ்வாய், 2 ஏப்ரல் 2019 (18:41 IST)
ஒருமுறை மக்கள் ஏமாந்து விட்டார்கள் என்றும் தி.மு.க கட்சியின் பொய் பிரச்சாரங்களையும், முகத்திரையினையும் தமிழகத்தில் அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு கிழித்தெறியும் கரூரில் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சிங்கை ஜி.ராமசந்திரன் பேட்டி அளித்தார்.
கரூர் மாவட்ட அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் மாவட்ட அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசனைக்கூட்டம் கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. 
 
இந்த கூட்டத்திற்கு முன்னதாக., மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி வீர வணக்கம் செலுத்தப்பட்டது. 
 
இதனை தொடர்ந்து., கரூர் மாவட்ட அளவில் உள்ள தொழில்நுட்ப நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு, உரையாற்றினார்கள். இந்நிலையில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அனைவரின் செயல்திறமைகளை பாராட்டினார். 
 
பின்னர் பேசிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சிங்கை.ஜி.ராமசந்திரன்., வரும் தேர்தலில் தி.மு.க வினரின் பொய் பிரச்சாரங்களை முறியடிக்கும் வகையில் இன்னும் உள்ள 16 நாட்கள் விடாமல் வேலை செய்ய வேண்டுமென்றும் கூறினார். 
 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த, சிங்கை.ஜி.ராமச்சந்திரன் பேட்டியளிக்கும் போது., திராவிட முன்னேற்ற கழகத்தின் பொய் பிரச்சாரங்களுக்கு முற்று வைக்கும் வகையில் இந்த கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. பொள்ளாச்சி சம்பவத்தில் அ.தி.மு.க வினரை மட்டுமே குற்றம் சாட்டி வருவதை தற்போது நடுநிலை ஊடகங்கள் யார், யார் என்று தெரிந்துள்ளது.
 
 பின்னர் கோடநாடு கொலை விவகாரத்தில் கூட தமிழக முதல்வரின் பெயரை வெளியிட்டு அவரையும் அ.தி.மு.க கட்சியையும் அளிக்க தி.மு.க நினைக்கின்றது. இந்நிலையில் தற்போது அது தி.மு.க வினரின் திட்டமிட்ட சதி என்பது தற்போது தெரியவந்துள்ளது. வரும் தேர்தலில் தி.மு.க வினரின் பொய்பிரச்சாரங்களை கிழித்தெறிந்து அவர்களின் முகத்திரையை கிழித்தெரிய அ.தி.மு.க வின் தொழில்நுட்ப பிரிவு தீவிரமாக பணியாற்றும் என்றதோடு, துரைமுருகனின் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை செய்தி இந்தியா அளவில் ஒரு ஹாஸ்டேக்கினை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்நிலையில் தி.மு.க பொருளாளர் துரைமுருகனோ, இது அனாதை பணம் என்று கூறி இருக்கின்றார். ஆகவே, அனாதைப்பணம் என்றால் ரூ 2 ஆயிரம் முதல் ரூ 10 ஆயிரம் இருக்கும் ஆனால், ரூ பல கோடிகள் கிடைக்கின்றது என்றால் அது அனாதைப்பணமா ? அந்த அனாதைப்பணமும் அந்த தி.மு.க கட்சியினரின் வார்டு செயலாளரும், பூத் ஏஜெண்டின் பெயரும் இடம்பெறுமா ? என்று கேள்வி எழுப்பியவர், ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 20 ரூபாய் டோக்கன் கொடுத்த சம்பவம் போல, தமிழகத்தில் இனி நடைபெறாது. ஒரு முறை ஏமாற்றப்பட்டுள்ளனர். மக்கள் இந்த முறை தெளிவாக ஒருமுடிவு எடுத்துள்ளனர். 
 
அதற்கு அ.தி.மு.க வின் தகவல் தொழில்நுட்பம் பெரும் பங்காற்றும் என்றார். பேட்டியின் போது., கொங்கு மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்., கரூர் மாவட்ட அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அபிஸ் செல்வம், மாவட்ட தலைவர் பசுபதி செந்தில், மாவட்ட துணை செயலாளர்கள் மதுசுதன்., கடவூர் சுப்பிரமணி, மாவட்ட பொருளாளர் செந்தில், கேபிள் கதிரேஷன், சுசிலா சாமியப்பன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீங்களே வச்சிட்டு; நீங்களே எடுத்துட்டு, நாங்க மாட்டுவோம்: ரெய்டு குறித்து தினகரன் பொளேர்