Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தூத்துக்குடி திமுக அலுவலகத்தில் இவர் படம் எதற்கு – குடும்பக் கட்சியென நிரூபித்த திமுக !

Advertiesment
தூத்துக்குடி திமுக அலுவலகத்தில் இவர் படம் எதற்கு – குடும்பக் கட்சியென நிரூபித்த திமுக !
, வியாழன், 21 மார்ச் 2019 (10:30 IST)
தூத்துக்குடியில் உள்ள திமுக அலுவலகத்தில் ஸ்டாலினின் மகன் உதயநிதியின் படம் வைக்கப்பட்டுள்ளது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

சமூகநீதி தளத்தில் பல அளப்பரியப் பங்களிப்பை திமுக செலுத்தியுள்ள போதிலும் திமுக மீது வைக்கப்படும் விமர்சனங்களில் வைக்கப்படும் விமர்சனங்களில் முக்கியமானது குடும்ப அரசியல். கலைஞரின் மகன் ஸ்டாலின் இப்போது திமுக தலைவரின் இப்போது திமுகவின் தலைவராகியிருப்பது முதற்கொண்டு சமீபத்தில் அறிவிக்கப்பட்ட திமுக வேட்பாளர் பட்டியல் வரை திமுக வாரிசு அரசியலில் ஈடுபடுகிறது என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

அதுபோல இப்போது திமுகவில் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸடாலின் முன்னிறுத்தப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபகாலமாக அரசியல் நிகழ்ச்சிகளில் அதிகமாக முன்னிறுத்தப்படுவதும்  மூன்றாம் கலைஞர் என பட்டப்பெயர் கொண்டு அழைக்கப்படுவதும் என பல வேலைகள் செய்து உதயநிதியை முன்னிறுத்தி வருகின்றனர்.

ஆனால் இதற்கெல்லாம் திமுக தரப்பு மறுப்பு தெரிவித்தாலும் மறைமுகமான வேலைகளை செய்துகொண்டுதானிருக்கிறது. அதற்கு மற்றுமொரு உதாரணமாக தூத்துக்குடி திமுக அலுவலகத்தில் உதயநிதி ஸ்டாலின் புகைப்படம் திமுக முன்னாள் இன்னாள் தலைவர்களின் படத்திற்கு அருகில் வைக்கப்பட்டுள்ளது. திமுக அலுவலகங்கல்ளில் திமுக தலைவர்களின் படங்கலும் தேர்தல் காலங்களில் வேட்பாளர் படங்களும் வைக்கப்படுவதும்தான் மரபு. ஆனால் இதற்கு எதுவுமே சம்மந்தம் இல்லாத உதயநிதி படம் வைக்கப்பட்டுள்ளது ஏன் எனக் கேள்வி எழுந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேரதிர்ச்சியில் அமமுக: திமுகவில் இணைந்த அமமுகவின் வி.பி.கலைராஜன்!!!