Publish Date: Mon, 22 Apr 2019 (09:26 IST)
Updated Date: Mon, 22 Apr 2019 (09:27 IST)
சமீபத்தில் நடந்துமுடிந்த மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவில் 10 வாக்குச்சாவடிகளுக்கு மீண்டும் வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் நடந்து முடிந்தன. இதில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக செயல்படாத 8 வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்குப்பதிவில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுப்பப்படும் சில தொகுதிகள் ஆகியவற்றிற்கு மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு பரிந்துரை செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தர்மபுரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி பகுதிக்குட்பட்ட 4 வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்குக் கையில் மை மட்டுமே வைத்துவிட்டு அங்கிருந்த பாமகவினர் தாங்கள் வாக்களித்துள்ளதாகவும் அந்த பூத்தில் இருந்த சிசிடிவி கேமராக்கள் திசை திருப்பப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் இங்கு மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என திமுகவினர் அழுத்தம் கொடுத்தனர்.
இதனையடுத்து தர்ம்புரியில் உள்ள 8 தொகுதிகள் மற்றும் திருவாரூர் மற்றும் கடலூர் ஆகிய பகுதிகளில் உள்ள 2 தொகுதிகள் உட்பட 10 தொகுதிகளுக்கு மறுவாக்குப்பதிவு நடத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
webdunia
Publish Date: Mon, 22 Apr 2019 (09:26 IST)
Updated Date: Mon, 22 Apr 2019 (09:27 IST)