Publish Date: Sat, 20 Apr 2019 (14:27 IST)
Updated Date: Sat, 20 Apr 2019 (14:28 IST)
4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு மீண்டும் மே 1 முதல் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளில் ஏப்ரல் 18 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. அதையடுத்து மீதமுள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டபிடாரம், சூலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வரும் மே 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தேர்தல் பொறுப்பாளர்களும் நேற்று அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில் தேர்தல் பொறுப்பாளர்களிடம் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ளும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது சம்மந்தமான அறிவிப்பை திமுக தலைமைக் கழகம் இன்று அறிவித்துள்ளது.
அதன்படி. 1,2 தேதிகளில் எம்.சி.சண்முகையாவை ஆதரித்து ஓட்டப்பிடாரத்திலும் 3மற்றும் 4ஆம் தேதிகளில் மருத்துவர் சரவணனை ஆதரித்து திருப்பரங்குன்றத்திலும் 5, 6ஆகிய தேதிகளில் பொங்கலூர் பழனிச்சாமிக்காக சூலூரிலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார். 7, 8 ஆகிய தேதிகளில் அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜியை ஆதரித்தும் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்கிறார்
webdunia
Publish Date: Sat, 20 Apr 2019 (14:27 IST)
Updated Date: Sat, 20 Apr 2019 (14:28 IST)