வேட்பாளர் பட்டியல் விரைவில் ; நான் போட்டியிடுவேன் – தமிழிசை பதில் !

Webdunia
ஞாயிறு, 17 மார்ச் 2019 (13:01 IST)
அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக போட்டியிடவுள்ள 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று அல்லது நாளை வெளியாகும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

நாடாளு மன்றத் தேர்தலுக்கு இன்னும் சரியாக ஒரு மாத காலமே உள்ளது. தமிழகத்தில் உள்ள முக்கியக் கட்சிகள் அனைத்தும் திமுக அதிமுக ஆகிய அணிகளில் இணைந்துள்ளன. திமுகவும் அதிமுகவும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியது போக 20 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுகின்றனர். அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக வுக்கு கன்னியாகுமரி, கோவை, தூத்துக்குடி, ராமநாதபுரம் , சிவகங்கை ஆகியத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இத் தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை பாஜகவின் வேட்பாளர்கள் இன்று மாலை அல்லது நாளை அற்விக்கப்படுவார்கள் என்று கூறினார். மேலும் நீங்கள் போட்டியிடுவீர்களா என்ற கேள்விகு ‘ ஆம் நான் போட்டியிட அதிக வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது’ எனக் கூறினார். மேலும் கட்சி ஒதுக்கும் தொகுதியில் போட்டியிடுவேன் எனப் பதிலளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments