Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாரதியார் பிறந்தநாள்....சிறப்புக் கட்டுரை

Advertiesment
Bharathiyar's birthday
, வெள்ளி, 11 டிசம்பர் 2020 (20:24 IST)
(அறுசீர்க்க கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் - யாப்பிலக்கணம் )

கோடான கோடி யுள்ளம்

கொண்டிருக்கும் தமிழே எம்முன்
னோடியான புரட்சிப் பாட்டு
வேந்தனின்நன் நாளின் றாமே!
ஆடிக்காற் றெல்லாம் அக்க
வியின்வீரத் தைபோற் றுமாம்!
கூடுகின்ற அறிவெல் லாம்சீர்ப்
பாட்டின்லெம் மூளையில் சேரும்
நாடுகின்ற பேரன் பின்வெண்
முரசேஉன் மீசை போன்ற
சாடையிலே கம்பீ ரத்தைத்
தரிக்கின்றோம் அவன்சீ டராய்!( 
சினோஜ் மரபுக்கவிதைகள்)

எட்டயபுரத்தில் ஒரு முண்டாசுக்கவிப் பாரதி பிறக்கும் முன் என்றைக்காவது ஒரு கவிஞனுக்கான இலக்கணத்தை இப்பூமிக் கண்டதுண்டா? ஆனால் அந்த ஏக்கத்தேம்பலை எல்லாம் தீர்த்திட வந்தார் பாரதியார். என்ன குறை இந்தத் தமிழில் என்று சாட்டையடிக்கேள்விகளைத் தன் எழுத்தில்வைத்துப் பாருக்கே அச்சமில்லை அச்சமில்லை என்று பயத்திலிருந்து விடுதலையடைவைக்கும் ஒரு தைரியச் சங்கைப் பாட்டில்வைத்துப் பாடிவிட்டுபோனான் பாரதி.

நீ காணாத காட்சிகளில்லை, அடையாத அனுபவமில்லை, கூறாத பொருளில்லை. மண்ணுயிர்களெல்லாம் பயனுறவேண்டித் தன்சுகம் மறந்தவொரு கலைஞனை இனியொரு நாடு பெறுமா என்பது சந்தேகமே! ஆனால் அந்தக் கொடுப்பினையைத் தமிழ்த்தாய் பெற்றுக்கொண்டாள் என்பது நாங்கள் வாய்நிறையக் கூறிக்க்கொள்வது என் பெருமையே.

அகவை என்பது ஆயுளில் அல்ல என்று நீ திருப்புகழும் வாழ்ந்த உனது நேர்த்தியான வார்த்தைகளே உலகிற்குச் சாட்சிகூறும்.

வறுமையில் செழிப்பாக உருவம்பெற்று எம்போன்று இளையகவிகளுக்கு நீ அன்றே மொழிவயலில் பாத்திக்கட்டிப்போயிருக்கிறாயே அதுபோதும் இவ்வுலகமுள்ள காலம்மட்டும் உன் எழுத்தெழுச்சி என்பது பிரஞ்சுப் புரட்டிபோல் அழிக்கமுடியாத வரலாறாகவும் மறைக்கமுடியதா வானத்தின் பிம்பமாகவும் வாழ்ந்துகொண்டெயிருக்கும்.
உன் தேசவிடுதலையெழுச்சியிலும் பெண்விடுதலையிலும் மக்கள் காலகாலத்திற்கும் உன் தீர்க்கதரிச்சனத்தை என்றும் அறைகூவலிட்டுக்கொண்டே இருப்பார்கள்.

நீ பாட்டுக்குயிலாக எங்களின் மனப்பாரத்தைக் குறைக்க வந்து இன்னும் ஆயிரம் காலமாண்டு காலம் ஆனாலும் நீங்காமல் நெஞ்சில் நின்று எரியும் புரட்சித் தீபம் நீ. ஞானம் களஞ்சியம்நீ. அன்பின் தொகை நீ. அரிதான காவியக் கவிஞன் நீ.

உன்னை அடிதொற்றியே இனிப்பாடல் எழுதமுடியுமென்ற நிலையை நீ அந்தச் சிறிய இளம்வயதில் தோற்றுவிட்டதைத்தான் யாரால் மாற்றியெழுத முடியும்?

உன்னை அடிதொழும் எங்கள் எழுதுகோலுக்கு நீயே ஆதர்சனக்குருவாகி மதம்கடந்த பேரெழில் கருணைப்பொழிவால் எங்கள் எழுத்தும் நீடுழி வாழ நீ ஆசிர்வதித்தாய் என்று உன்னை வேண்டிக்கொள்கிறோம்!!

காலம்தான் மாறிவிட்டது. உன் சிரஞ்சீவி எழுத்துகள் என்பது எக்காலத்திற்கும் பொருத்திபோகின்ற பொன்னடையாகும், மின்னும் கருத்துகள் சஞ்சீவிப்பர்வதமலைபோல் அறிவுள்ளோரின் தாகத்தைத் தீர்க்கும் தமிழ்த்தாயின் ஆகச்சிறந்த சாசனக்கருவியாகும் என்பது என் கருத்து..

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் இன்று 1235 பேருக்கு கொரோனா உறுதி ! 17 பேர் பலி