Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அன்னையர் தினம்…சிறப்புக் கட்டுரை

Advertiesment
Happy Mother's Day
, திங்கள், 11 மே 2020 (16:37 IST)
இந்த உலகத்தை கடவுள் படைத்தாலும், இயற்கையே படைத்தாலும் கூட அகில உலகினையும் ஆட்டிப் படைக்கும் அறிவுள்ள மனிதர்களைப் படைப்பது அன்னை. அன்னையர்கள் தான் நாம் கண்ணால் காணும் தெய்வ ரூபங்களாக இருக்கின்றனர்.

’’அதனால் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’’ என அவ்வையார் பாட்டி தனது தமிழ் நீதி நூல்களில் ஒன்றான கொன்றை வேந்தனின் அர்த்தம் பொருந்தி நமக்கு உரைத்திட எழுதி வைத்துள்ளார் போலும்.

எத்தனையோ,  வெளியுலகச் சவால்களை ஆண்கள்  எதிர்கொண்டுள்ள போதிலும், கருவிலேயே பல எதிர்ப்புகளைத் தாண்டி இந்தச் சமூகத்தில் பெருமதிப்புடன் திகழ்ந்து, அன்றாடம் குடும்பத்தையும், குழந்தைகளையும், உறவினர்களையும், வேலையும், அக்கம்பக்கத்து வீட்டாரையும் பரிபக்குவத்துடன் அணுகி,  வீட்டுக்குள்ளும் வெளியிலும் பலவித சவால்களைச் சந்தித்து அதை அனுசிரத்தையும் மேற்கொண்டு சாதனை படைத்துவருபவர் தான் அன்னை.

வீட்டில் உள்ளவர்களின் உடல் நலத்துக்கு சொத்தைக் கத்தரிக்காயை  நீக்கிவிட்டு நல்லவற்றைச்  கூட்டிச் சேர்த்துச் சமைத்துப் பரிமாறிட மெனக்கெடுவது முதல்  இந்தச் சமூகத்தில் தம் குழந்தைகளையும், கணவனையும் பொறுப்புள்ள குடிமகனாகக் கட்டமைப்பது வரை எதிலும் ஒரு முக்கியப் பங்காற்றி வரும் ஒவ்வொரு நாட்டுத் தேசத்தாயின் அருந்தலைப் புதல்விகள்தான் அன்னையர்.

ஒவ்வொரு அன்னைமார்களின்  கைகளில் தான் ஒரு நாட்டின் எதிர்க்காலத்தைச் சிருஷ்டித்துக் கட்டமைக்கும் மாணவத் தூண்கள் எல்லாம் செதுக்கப்படுகிறது.

அன்னையின் வயிற்றில் கருவானதில் இருந்து இந்த உலகத்தையும் உலக நடப்புகளையும் கவனிக்கத் தொடங்கும் குழந்தை அவளது வளர்ப்பிலும் அவளது பண்பைப் போன்ற வார்ப்பிமும் தான் இந்தச் சம்மூகத்தில் ஒருவனாகவும், மக்களின் பிரநிதியாகவும், மக்களால் மக்களுக்காக மக்களே ஆளும் மாபெரும் தலைவனாகவும் உருவெடுக்கிறான்.

அன்னையின் கைகளில் ஒரு களிமண் இருந்தாலும் அது விலையேறப்பட்ட கலைநயப் பொருளே ஆகும் எனில் ஒரு குழந்தையை அவள் எப்படி வனைப்பாள் என்பதற்கு நாமெல்லாம் சான்று.

இந்த உலகமே அன்னையின்  காலடியில் தவம் கிடந்தாலும் அவளது கண்ணும் கருத்துமான கொள்கைகள் எல்லாம் மனித சமுதாயத்திற்குத் தேவையான பொறுப்புள்ள ஆளுமைகளாக தனது குழந்தைகளை உருவாக்க வேண்டு என்றே சிந்தனை செய்வாள்.

அதனால், பெண்களின் தனித்தன்மை இனிமேலும் போற்றிப் பாதுக்காக்கபட வேண்டும். அது மானிடத்தை உயர்த்தும் திறவுகோல் ஆகும்.

எத்தனை பிரச்சனைகள் வேண்டுமானாலும்  எதிர்கொண்டு வரட்டும், தனது  பிரசவ வலிகளையே தன்னம்பிக்கையும் அதிக ஆற்றலுடன் தாங்கியவளுக்கு  அதெல்லாம் ஒரு சொற்பம் தான். அந்தத் தாயிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள எத்தனை உண்டு தெரியுமா ?

''அலுப்பில்லாமல் நிமிடம் தோறும் உழை! ஆகாசத்தை போல் நாளும் அறிவை விரிவாக்கிடு… சுமைகளைக் கண்டு சுருண்டு படுக்கையில் படுத்துக்கொள்ளாதே … சுமை வந்தால் தான் நீ அதை வெல்கிறாயா இல்லை அது உன்னை வெல்கிறாயா என்பதற்கான ஒரு முடிவு தெரியும். காலம் முழுவதும் உழைத்துக் கொண்டே இருந்தாலும் கூட கொண்ட கொள்கைகளில் இருந்தும் தனக்கு உண்டான கடமைகளில் இருந்தும் அணுவளவும் விலகிச் செல்லக்கூடாது. சூரியனே எதிர்த்து படைதிரட்டி நம்மேல் போர்தொடுக்க வந்தாலும் அதற்கு அதிர்ந்து போய் நிற்காமல் நம்மை நிதானப் புத்தியுன் துணிந்து நின்று அதை எதிர்கொள்ளும் தைரியத்தை நெஞ்சில் விதைத்து உனது வல்லமையால் அதை வென்று முடி! துக்கம் என்பது இலைகள் உதிர்வு போல் அதை நீ விரும்பாவிட்டாலும் உன் மனக்கிளையில் மீண்டு முளைத்து உன்னைப் பற்றித் தொங்கிகொண்டு உன் உறுதியைக் கண்டு கடைசியில் அது தானாகவே உதிர்ந்து விடும். வையத்தில் வாழ்வது ஒருவாழ்க்கை அது உண்மையும் உத்தமுமாய் வாழ்ந்து இந்த வாழ்க்கையைப் பயனுள்ளதாக நிறைவு  செய் ! ஊக்கத்தின் சக்தி என்பது உள்ளமே அதை நாம் மகிழ்ச்சி என்றால் மகிழ்ச்சியும், துக்கம் என்றால் துக்கமும் நம்மை வந்து அடையும் ! ஆனால் ஒருபோதும் பிரச்சனைகள் எனும் பூதத்தைக் கண்டு பயப்படாதே.. எந்தக் காலத்திலும் எதையும் வெல்லும் மனோதிடம் உனக்கு உண்டு’’ என்று அவளது அனுபவ மொழிகள் நமக்கு அனுதினமும் எச்சரித்து அசரீரீபோல் மனதில் சமிக்ஞ்கை கொடுத்து மூளைக்கு ஒரு ஆலோசனை சொல்லிக்கொண்டே உள்ளது.

அன்னையில் பாதம் தொட்டு அவளது வார்த்தைகளை உள்வாங்கி அவள் சென்ற பாதையிலே நாமும் செல்வோம். அன்னையை வாழ்த்தி வணங்கியபடி ..

ஏனென்றால் அவள் ஓட்டுமொத்த அறிவுகத்தின் ஒவ்வொரு மனிதனின் முதல் அனுபவப்  பேராசிரியை அன்னை என்பதனால்தான்.

- சினோஜ் கியான்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எவ்வாறு உடல் பருமனை குறைப்பது...? இதோ அதற்கான வழிமுறைகள்!