Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சம்பளமே வாங்காமல் நடித்த சிவகார்த்திகேயன்.. ‘பராசக்தி’ பணம் அவ்வளவுதானா?

Advertiesment
சிவகார்த்திகேயன்

Siva

, வியாழன், 22 மே 2025 (12:40 IST)
பராசக்தி படத்தில் நடிப்பதற்கு சம்பளம் வேண்டாம். அதற்கு பதிலாக, ஈசிஆரில் தனக்கு ஒரு வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் நடிகர் சிவகார்த்திகேயன் ஒப்பந்தம் பேசியதாக கூறப்படுகிறது.
 
வீடு கட்டும் பணிகள் தொடங்க இருந்த நேரத்தில் தான், தற்போது திடீரென அவர் அமலாக்கத்துறை சோதனை காரணமாக தலைமறைவாகி விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 
சிவகார்த்திகேயன், தற்போது ஒரு படத்திற்கு 50 முதல் 70 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி வருகிறார் என்றும் கூறப்படுகிறது. அவர் பராசக்தி படத்தை மலை போல நம்பி இருந்த நிலையில், அந்த படத்தில் சம்பளம் கிடைக்காதது மட்டுமின்றி, அந்த படம் வெளியாவதற்கான வாய்ப்பும் குறைவாக இருப்பதாக கூறப்படுவதால், பெரும் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.
 
இருப்பினும், தலைமறைவாக உள்ள ஆகாஷ் பாஸ்கரன் விரைவில் வெளியே வருவார் என்றும், அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து, பராசக்தி படத்தை வெளியிடுவவதோடு, சிவகார்த்திகேயனுக்கும் சொல்லிய வாக்கை காப்பாற்றுவார் என்றும் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காயடு லோஹரிடம் ED விசாரணையா? வளர்ந்து வரும் நேரத்தில் இப்படி ஒரு சிக்கலா?