பல ஆண்டுகளுக்குப் பிறகு, டிராகன் என்ற வெற்றிப் படத்தில் நடித்ததன் காரணமாக நடிகை காயடு லோஹர் ரசிகர்களிடையே பேசப்பட தொடங்கினார். இதன் மூலம் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில், திடீரென அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்தச் சோதனையின் போது, அவர் தயாரிக்கும் படங்கள் குறித்து ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதயம் முரளி, இட்லி கடை, பராசக்தி, எஸ்.டி.ஆர் 49 உள்ளிட்ட படங்களை அவர் தயாரித்து வரும் நிலையில், அந்தப் படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு கொடுக்கப்பட்ட சம்பளங்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
அந்த வகையில், இதயம் முரளி மற்றும் எஸ்.டி.ஆர் 49 ஆகிய இரண்டு படங்களில் நாயகியாக நடிக்கவுள்ள காயடு லோஹருக்கு ஒரு பெரும் தொகை சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாகவும், அதுகுறித்து விசாரணை நடத்த அமலாக்கத்துறை திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், இந்தத் தகவல் இதுவரை அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படாத நிலையில், திரைத்துறையில் பரபரப்பு நிலவுவதாக கூறப்படுகிறது.