Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 14 April 2025
webdunia

இளைஞர்களுக்கான ‘சேம்சங் நோட் புக் ’அட்டகாசமான சலுகை விலையில் ...

Advertiesment
Samsung
, வியாழன், 13 டிசம்பர் 2018 (15:59 IST)
சாம்சங் நிறுவனம் இளைஞர்களின் தேவையை அறிந்து அவர்களுக்காக தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து, தன்னை இந்தியாவில் அப்டேட் நிறுவனமாக்கி தொடர்ந்து வெற்றிப் பாதையில் முன்னணியில் சென்றுகொண்டுள்ளது.
பல புதிய கேலக்ஸி ரக செல்போன் மாடல்களை அறிமுகம் செய்து தனக்கு வலுவான அடித்தளம் அமைத்துக்கொண்டது.
 
இந்நிலையில் சேம்செங் நிறுவனம் நோட்புக் 9 பென் என்ற லேப்டாப் சாதனத்தை அமெரிக்காவில் விற்பனைக்கு கொண்டுவரத்திட்ட மிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்த  நோட்புக் 9 பென் 13 இன்ச் டிஸ்பிலே மற்றும் 15 இன்ச் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்றூ தெரிவிக்கபட்டுள்ளது.
 
மேலும் இது  வரைபடக் கலைஞர்களுக்கு உதவும் என்று எதிர்பார்க்க்படுகிறது. மென்பொருள் இண்டெல் 8 வது செயலியை கொண்டுள்ளது . விண்டோஸ் 10 ஹோம் இயங்குதளம் இவற்றுள் இடம் பெற்றுள்ளதால் உபயோகப்படுத்த அட்டகாசமாக இருக்கும். இதில் 54 வாட் பேட்டரி எச் டி .எம்.ஐ. போர்ட், யுஎஸ்பி போர்ட், தண்டர் போர்ட்,மைக்ரோ எஸ் டி போர்ட், , என பல இணைப்புகள் இவற்றுள் உள்ளது.
 
எச்.டி.ஐ.ஆர்.htir கேமரா  மற்றும் அதி நவீன வசதிகளைக் கொண்டுள்ளது. இதன் விலை ஒரு லட்சம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில் இந்த நோட்புக் 9 பென்  அடுத்த மாதம் அதாவது அடுத்த வருடம் ஜனவரி மாதம் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விலை குறைந்த ரெட்மி ஸ்மார்ட்போன்: எவ்வளவு தெரியுமா?