Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என்ன ஆனது...? சாம்சங் ஸ்மார்ட்போன் தயாரிப்பு ஆலை மூடல்

Advertiesment
என்ன ஆனது...? சாம்சங் ஸ்மார்ட்போன் தயாரிப்பு ஆலை மூடல்
, புதன், 12 டிசம்பர் 2018 (20:25 IST)
சாம்சங் நிறுவனம் சீனாவில் உள்ள தனது ஸ்மார்ட்போன் தயாரிப்பு ஆலையை மூட உள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
சீனாவில் தியாஞ்சின் மற்றும் ஹூசிஹோ ஆகிய ஆலைகளில் சாம்சங் ஸ்மார்ட்போன் தயாரிப்பு வேலைகள் நடைபெறும். தற்போது தியாஞ்சின் சாம்சங் எலக்டிரானிக்ஸ் டெலிகம்யூனிகேஷன் தயாரிப்பு ஆலையின் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்வதாக சாம்சங் தெரிவித்துள்ளது. 
 
சமீபத்திய சூழ்நிலையில், இந்தியா, வியட்நாம் போன்ற நாடுகளில் சாம்சங் அதிக கவனம் செலுத்தி வருகிறது. எனவே, தியாஞ்சின் ஆலை மூடப்படுவதாகவும், ஹூசிஹோ ஆலை இயங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. 
 
தியாஞ்சின் ஆலையில் மொத்தம் 2600 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த ஆலையில் ஆண்டு முழுக்க 3.6 கோடி மொபைல் போன்களையும், ஹூசிஹோ தயாரிப்பு ஆலையில் மொத்தம் 7.2 கோடி மொபைல் போன்களை சாம்சங் உற்பத்தி செய்கிறது. 
 
இந்த ஆண்டு இறுதியில் ஆலை மூடப்படுவதால் இங்கு பணியாற்றி வருவோருக்கு சட்ட ரீதியாக வழங்கப்பட வேண்டிய தொகை வழங்கப்படும் அல்லது வேறு தயாரிப்பு ஆலைகளில் பணி வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்ட்ராமி டேனியல்ஸ் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி