சாம்சங் விரைவில் வெளியிட உள்ள கேலக்ஸி எஸ் 23 (Galaxy S23 Ultra) ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் ஸ்மார்ட்போன் விரும்பிகளின் கவனம் ஈர்த்துள்ளது.
உலகம் முழுவதும் பல புது தொழில்நுட்பங்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை பிரபலமான சாம்சங் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் இதுவரை சாம்சங் வெளியிட்டுள்ள ஸ்மார்ட்போன்களை விட கூடுதல் அம்சங்களுடன் Samsung Galaxy S23 Ultra விரைவில் இந்தியாவில் வெளியாக உள்ளது.
பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் சில சாம்சங் நிறுவனத்தாலேயே வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் மூன்று விதமான மெமரி ஆப்சன்களுடன் வெளியாக உள்ளது. மூன்று மாடல்களுக்கும் 12 GB RAM தான். ஆனால் Internal Memory மட்டும் 256GB, 512GB மற்றும் 1TB ஆகிய மூன்று வகைகளில் வருகிறது.
சாம்சங் முன்னதாக வெளியிட்ட கேலக்ஸி எஸ்22 அதன் 200 எம்பி சூப்பர் கேமராவுக்காகவே அதிகம் பேசப்பட்டது. தற்போது இந்த Galaxy S23 Ultraவிலும் 200MP கேமரா வசதி உள்ளது.
ஸ்மார்ட்போனின் இதர சிறப்பம்சங்கள்
-
6.8 இன்ச் எட்ஜ் க்யூஹெச்டி ப்ளஸ் டைனமிக் அமோலெட் 2 எக்ஸ் டிஸ்ப்ளே
-
120Hz ரெஃப்ரெஷ் ரேட், 360Hz டச் சேம்ப்ளிங் ரேட்
-
கொரில்லா க்ளாஸ் விக்டஸ்2, குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 8 Gen2
-
12GB RAM, 256GB, 512GB மற்றும் 1TB இண்டெர்னல் மெமரி
-
5000 mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங்
-
ஆண்ட்ராய்டு 13, One UI 5.1
இந்த Samsung Galaxy S23 Ultra ஸ்மார்ட்போன் கிராஃபைட், ஸ்கை ப்ளூ, லைம், ரெட் ஆகிய நான்கு வண்ணங்களில் கிடைக்கிறது.
இதன் விலை 256GB மெமரி கொண்டது ரூ.1,24,999 என்றும், 512ஜிபி மெமரி கொண்டது ரூ.1,34,999 என்றும், 1 டிபி மெமரி கொண்டது ரூ.1,54,999 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ப்ரீ ஆர்டரில் வாங்கினால் கேஷ்பேக் உள்ளிட்டவை பெறலாம் என அறிவித்துள்ள சாம்சங் நிறுவனம் தனது தளத்தில் இதற்கான முன் விற்பனையையும் நடத்தி வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் உலகம் முழுவதும் பிப்ரவரி மாதத்தில் வெளியாக உள்ளது.