பிரபல டெலிகாம் நெட்வொர்க் நிறுவனமான ஏர்டெல் அதிகமான டேட்டா சலுகைகளை வழங்கும் இரண்டு புதிய ப்ளான்களை அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில் அதிகமாக பயன்படுத்தும் செல்போன் நெட்வொர்க் சேவைகளில் முக்கியமான ஒன்றாக ஏர்டெல் உள்ளது. இந்தியா முழுவதும் 5ஜி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஏர்டெல் நிறுவனமும் 50 நகரங்களில் 5ஜி சேவையை தொடங்கியுள்ளது.
இந்நிலையில் அதிகமான டேட்டா சேவையை தரக்கூடிய புதிய இரண்டு ப்ளான்களை ஏர்டெல் அறிமுகம் செய்துள்ளது. ரூ.489க்கு உள்ளூர், வெளிமாநில அன்லிமிடெட் அழைப்புகள், 300 இலவச எஸ்.எம்.எஸ்கள், 50ஜிபி மொத்த டேட்டா 30 நாட்கள் வேலிடிட்டியில் வழங்கப்படுகிறது.
அதேபோல ரூ.509க்கு உள்ளூர், வெளிமாநில அன்லிமிடெட் அழைப்புகள், 300 இலவச எஸ்.எம்.எஸ்கள், 60ஜிபி மொத்த டேட்டா ஒரு மாத வேலிடிட்டியில் வழங்கப்படுகிறது. இந்த ரீசார்ஜ் ப்ளான்களுடன் வின்க் ம்யூசிக் இலவச சப்ஸ்க்ரிப்ஷன், ஹலோடுயூன்கள் மற்றும் பாஸ்டேக் கேஷ்பேக் சலுகைகளும் வழங்கப்படுகிறது.