Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குறைந்த விலையில் நிறைந்த தரம்! வரவேற்பு பெற்ற சாம்சங் கேலக்சி ஏ14!

Samsung Galaxy A14
, செவ்வாய், 31 ஜனவரி 2023 (15:58 IST)
சாம்சங் நிறுவனத்தின் புதிய அறிமுகமான கேலக்சி ஏ14 (Samsung Galaxy A14) ஸ்மார்ட்போன் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்சி ஏ14 ரக ஸ்மார்ட்போனை சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. குறைந்த விலையில் 5ஜி தொழில்நுட்ப வசதியோடு கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதன் சிறப்பம்சங்களாவன:
  • சாம்சங் எக்ஸினோஸ் 1330 ப்ராசசர், ஆக்டோ கோர் (2.4 GHz, Dual core + 2 GHz, Hexa Core)
  • மாலி G68 MC4 கிராபிக்ஸ், 6.6 இன்ச் (16.76 செ.மீ) ஸ்க்ரீன் சைஸ்,
  • 4 ஜிபி / 8 ஜிபி ரேம், 64 ஜிபி இண்டர்னெல் மெமரி, 1 டிபி எக்பாண்டபிள்,
  • 13 எம்.பி வைட் ஆங்கிள் முன்பக்க கேமரா
  • பின்புறம் 50 எம்பி வைட் ஆங்கிள், 2 எம்பி மேக்ரோ, 2 எம்பி டெப்த் கேமராக்கள்
  • வைஃபை, ப்ளூடூத் v5.2, 5ஜி, ஹாட்ஸ்பாட், யூஎஸ்பி டைப் சி,
  • 5000 mAh பேட்டரி, 52 மணி நேரம் சார்ஜ் தாங்கும் திறன், 15W ஃபாஸ்ட் சார்ஜிங்,

இவ்வளவு வசதிகளுடன் கூடிய இந்த ஸ்மார்ட்போன் ப்ளாக், லைட் க்ரீன் மற்றும் டார்க் ரெட் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் விலை சாம்சங் தளம் மற்றும் அமேசான் உள்ளிட்டவற்றில் 4 ஜிபி ரேம் கொண்ட மாடல் ரூ.16,499க்கும், 8 ஜிபி ரேம் கொண்ட மாடல் ரூ.20,999க்கும் விற்பனையாகிறது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாணவிக்கு காதல் தொல்லை; தட்டிக் கேட்ட தந்தையின் மீது இளைஞர்கள் தாக்குதல்