Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இதயத்துடிப்பு முதல் ரத்தக்கொதிப்பு வரை..! அனைத்தையும் கண்காணிக்கும் மோதிரம்! - Samsung Galaxy Ring அறிமுகம்!

Advertiesment
Samsung Smart Ring

Prasanth Karthick

, வியாழன், 11 ஜூலை 2024 (10:27 IST)

மின்சாதன உற்பத்தில் முன்னிலை வகிக்கும் சாம்சங் நிறுவனம் தனது புதிய Samsung Galaxy Ring-ஐ இன்று உலகளவில் அறிமுகம் செய்துள்ளது.

வளர்ந்து வரும் தொழில்நுட்பம் காரணமாக அனைத்து விதமான வசதிகளும் ஸ்மார்ட்போன்களுக்குள் சுருங்கி வருகின்றன. ஸ்மார்போனை தொடர்ந்து ஸ்மார்ட்வாட்ச் என அடுத்தடுத்து பல Gadgetகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. தற்போது பலரும் தினசரி காலை உடற்பயிற்சி செய்வது, ரத்தக்கொதிப்பு, இதயத்துடிப்பு ஆகியவற்றை கண்காணிக்கவும், சரியாக பேணவும் ஸ்மார்ட்வாட்ச்களை அதிகம் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் இந்த வசதிகள் அனைத்தையும் ஒரு மோதிரத்தில் சுருக்கி சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய ஸ்மார்ட் ரிங்தான் Samsung Galaxy Ring. ஸ்மார்ட்வாட்ச்களை போல இதை சார்ஜ் செய்து பயன்படுத்த முடியும். இதற்கான செயலியை ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்து கொண்டால், மோதிரத்தின் மூலமாக ரத்த அளவு, இதயத்துடிப்பு போன்றவற்றை கண்டறிந்து செயலியின் மூலமாக தெரிவிக்கும்.
 

இந்த சாம்சங் ரிங் முழுவதும் டைட்டானியம் உலோகத்தால் செய்யப்பட்டுள்ளது. உடல் வெப்பநிலை கண்டறிதல், ரத்த ஆக்ஸிஜன் அளவை அறிதல், இதயத்துடிப்பு, கலோரிகளை கணித்தல், நடைப்பயிற்சியை கணக்கிடுதல் என பல உடல்நலம் சார்ந்த வசதிகளும் இந்த ஸ்மார்ட் ரிங்கில் உள்ள நிலையில், இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.35 ஆயிரமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பீகாரில் இன்னொரு பாலம் இடிந்தது.. 3 வாரங்களில் 13 பாலங்கள் இடிந்ததால் அதிர்ச்சி..!