Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பஜாஜ் நிறுவனத்தின் அட்டகாசமான CNG பைக்! Bajaj Freedom 125 CNG அறிமுகம்! – சிறப்பம்சங்கள் மற்றும் விலை!

Advertiesment
Bajaj Freedom 125 CNG

Prasanth Karthick

, ஞாயிறு, 7 ஜூலை 2024 (12:14 IST)

இந்தியாவில் பிரபலமான மோட்டார் பைக் நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் நிறுவனம் தனது புதிய  Bajaj Freedom 125 CNG ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய  Bajaj Freedom 125 CNG பைக்கான பெட்ரோல், கேஸ் இரண்டிலும் இயங்கும் வசதிக் கொண்டது. இதன் 125CC எஞ்சினும், சிங்கிள் சிலிண்டர் பயன்பாடும் பைக்கின் வேகத்திறனுக்கு உதவுகின்றன.

இதில் 9.5PS Max power + 9.7Nm Torque உள்ளது. 5 ஸ்பீட் கியர்பாக்ஸ் உள்ளது. அதிகபட்ச வேகம் CNG கேஸில் 90.5 கிமீ மணிக்கு, பெட்ரோலில் இயங்கும்போது 93.4 கிமீ மணிக்கு வேகம் தருகிறது. 2 கிலோ கொள்ளளவு கொண்ட சிஎன்ஜி சிலிணர் உள்ளது. பெட்ரோல் டேங்க் 2 லிட்டர் வரை கொள்ளளவு கொண்டுள்ளது.

மைலேஜ் சிஎன்ஜியில் 200 கிலோ மீட்டர்களும், பெட்ரோலில் 130 கிலோ மீட்டர்களும் அளிக்கக்கூடியது. இதில் எல்சிடி இன்ஸ்ட்ருமெண்ட் கண்ட்ரோலுடன் ப்ளூடூத் வசதியும், டெடிகேட்டட் டாகிள் ஸ்விட்ச்சும் உள்ளது.

மூன்று வேரியண்டுகளில் கிடைக்கும்  Bajaj Freedom 125 CNG பைக்கின் NG04 Drum மாடல் ரூ.95,000, NG04 Drum LED ரூ.1,05,000, NG04 Disc LED ரூ.1,10,000 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை முதல் நெல்லை வரை அரசியல் கொலைகள்.. சட்டம், ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைவு: டாக்டர் ராமதாஸ்