Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

40 கோடிக்கும் அதிக வாடிக்கையாளர்களைப் பெற்று ஜியோ (Reliance JIo) சாதனை

Advertiesment
40 கோடிக்கும் அதிக வாடிக்கையாளர்களைப் பெற்று ஜியோ (Reliance JIo)  சாதனை
, செவ்வாய், 13 அக்டோபர் 2020 (21:50 IST)
இந்தியாவில் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோவால் ஏர்டெல் மற்றும் வோடபோன் 46 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக தொலைத்தொடர்பு ஆணையம் அறிக்கை வெளியிட்ட நிலையில் தற்போது 40 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்ட நெட்வொர்ககாக  ரிலையன்ஸ் ஜியோ  உள்ளது.

முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோவை கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கினார். முதலில் இலவசமாக டேட்டாக்கள் கொடுத்து, பின்னர் குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்பட்டன. இதனால் மக்கள் ஜியோவை போட்டி போட்டுக்கொண்டு வாங்கினர்.

இந்நிலையில், கொரொனா காலத்தில் மக்கள் நகர்புறத்தில் இருந்து கிராமத்திற்கு இடம்பெயர்ந்துள்ளனர்.  இதில் 2.9 லட்சம் பேர் மொபைல் எண் மற்று முறைமூலம் வேறு நிறுவனத்திற்கு மாறியுள்ளனர்.

ஜியோவில் பல சலுகைகள் மூலம் போட்டிகளைச் சமாளிக்க முடியாமல் ஏர்டெல், வோடபோன் நெர்ட்வொர்க் 47 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இதில் ஜியோ 37 லட்சம் சந்தாரார்களைப் பெற்றுள்ளது. பிஎஸ் என் எல் 2 லட்சம் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளதாகத் தொலைத் தொடர்பு ஆணையம் தெரிவித்ததது.

இந்நிலையில் 40 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்ட முதல் நெட்வொர்க் என்ற சாதனையை ஜியோ பெற்றுள்ளது.

இந்நிலையி ஜியோவில் 40 கோடியே 8 லட்சத்துக்கு 3ஆயிரத்து 819 வாடிக்கையாளார்களைக் கொண்ட நிறுவனமாக ஜியோ உருவெடுத்துள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் மீது வழக்குப் பதிவு