வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகள் குறித்து தவறான கருத்து தெரிவித்த நடிகை கங்கனா ரனாவத் மீது கர்நாடகாவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் வேளான் மசோதாக்களை நிறைவேற்றியது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் தெரிவித்த போதிலும் ஆளும் பாஜக அரசு தனது பெரும்பான்மையின் மூலம் அதை நிறைவேற்றியது.
இந்நிலையில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தனது டுவிட்டர் பக்கத்தில், பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளான் சட்டத்தைப் பாராட்டியுள்ளார்.
அதேசமயம் இச்சட்டத்தை எதிர்ப்பவர்களை விமர்சித்துள்ளார். அதாவது, கடந்தாண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச்சட்டத்திற்கு எதிராகப் போராட்டிய தீவிரவாதிகள்தான் இந்த வேளான் சட்டத்தைப் புரிந்து கொள்ளாமல் எதிர்க்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
நடிகை கங்கனா கூறிய கருத்துக்கு எதிராக வழக்கறிஞர் ஒருவர் புகார் அளித்தன் பேரில் நீதிமன்றம் வழக்குப் பதிவு செய்யும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
இவர் சமீபத்தில் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்புடன் தொடர்புப் படுத்தி பேசியது சர்ச்சையானது குறிப்பிடத்தகக்து.