Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

AI தொழில்நுட்பத்துடன் அதிரடியாக வெளியானது Motorola Edge 50 Ultra!

Motorola Edge 50 Ultra

Prasanth Karthick

, செவ்வாய், 18 ஜூன் 2024 (16:19 IST)
தற்போது செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் மோட்டோரோலா தனது புதிய ஏஐ சப்போர்ட் செய்யும் Motorola Edge 50 Ultra மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.



இந்தியாவில் 5ஜி அறிமுகமானது முதலாக 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதிகள் கொண்ட ஸ்மார்ட்போன்களுக்கு எதிர்பார்ப்புகள் உள்ளதால் பல ஸ்மார்ட்போன்களும் AI உதவியுடன் செயல்படக்கூடிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது மோட்டோரோலா நிறுவனத்தின் Motorola Edge 50 Ultra இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.

இதில் Moto AI, Smart connect வசதிகள் உள்ளது. இதன்மூலம் ஸ்மார்ட்வாட்ச், ஹெட்போன் உள்ளிட்ட சாதனங்களை பயன்படுத்துவதோடு, அவற்றின் மூலமாக ஏஐ தொழில்நுட்பத்தையும் எளிதாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

Motorola Edge 50 Ultra சிறப்பம்சங்கள்:
  • 6.7 இன்ச் pOLED ஸ்க்ரீன்
  • குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 8எஸ் ஜென்3 சிப்செட்
  • 3GHz ஆக்டாகோர் ப்ராசஸர்
  • ஆண்ட்ராய்டு 14,
  • டிஸ்ப்ளே பிங்கர் ப்ரிண்ட் சென்சார்
  • 12 GB RAM
  • 512 GB இண்டெர்னல் மெமரி (மெமரி கார்ட் ஸ்லாட் கிடையாது)
  • 64 MP + 50 MP + 50 MP ட்ரிப்பிள் OIS கேமரா
  • 50 MP முன்பக்க செல்பி கேமரா
  • 4500 mAh பேட்டரி, 125 W பாஸ்ட் சார்ஜிங், 50 W வயர்லெஸ் சார்ஜிங்
 
இந்த Motorola Edge 50 Ultra ஸ்மார்ட்போன் Forest Gray, Nordic Wood, Peach Fuzz ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் விலை Early Bird offer + Bank discount உடன் சேர்த்து ரூ.49,999 க்கு கிடைக்கிறது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காஞ்சிபுரத்தில் பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு: கணவர் மேகநாதன் கைது