Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

10 ஆயிரம் ரூபாய்க்கு சிம்பிளான 5ஜி ஸ்மார்ட்போன்! Lava Yuva 5G! – சிறப்பம்சங்கள் எப்படி?

Lava Yuva 5G

Prasanth Karthick

, வியாழன், 30 மே 2024 (16:57 IST)
குறைவான விலையில் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வரும் இந்தியாவை சேர்ந்த லாவா நிறுவனம் தற்போது தனது புதிய Lava Yuva 5G ஸ்மார்ட்போனை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Lava Yuva 5G


இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ள நிலையில் குறைந்த விலையில் கிடைக்கும் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல டிமாண்ட் உள்ளது. தற்போது இந்தியாவை சேர்ந்த லாவா நிறுவனம் தனது Lava Yuva 5G ஸ்மார்ட்போனை பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

Lava Yuva 5G ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
  • 6.5 இன்ச் ஹெச்டி+ கர்வ்ட் டிஸ்ப்ளே
  • யுனிசாக் டி750 சிப்செட், ஆக்டாகோர் ப்ராசஸர்
  • ஆண்ட்ராய்டு 14
  • 4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம்

webdunia

  • 64 ஜிபி / 128 ஜிபி விர்ச்சுவல் ரேம்
  • 50 எம்பி + 2 எம்பி டூவல் ப்ரைமரி கேமரா, LED ஃப்ளாஷ்
  • 8 எம்பி முன்பக்க செல்பி கேமரா
  • சைடு பிங்கர்பிரிண்ட் சென்சார்
  • ஆடியோ ஜாக், FM Radio வசதி உண்டு
  • 5000 mAh பேட்டரி, 18 W சார்ஜிங்

இந்த Lava Yuva 5G ஸ்மார்ட்போன் மிஸ்டிக் க்ரீன் மற்றும் மிஸ்டிக் ப்ளூ ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் விலை 4 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ9,499 ஆகவும், 4 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ.9,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன் கேமரா மற்றும் இதர அம்சங்கள் சாதாரணமாக ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கு உதவும் வகையில் உள்ளது. நல்ல கேமரா குவாலிட்டி, அதிவேக ப்ராசஸிங் போன்றவற்றை எதிர்பார்க்காத பயனாளர்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் சிறந்த தேர்வு.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வட மாநிலங்களில் வீசும் வெப்ப அலை.! ஏ.சி பற்றி எறிந்ததால் பரபரப்பு..!