Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கூலான விலையில்.. ஹாட்டான சிறப்பம்சங்கள்! – Infinix Hot 30 5G!

Advertiesment
infinix
, புதன், 19 ஜூலை 2023 (08:52 IST)
குறைந்த விலையில் சிறந்த 5ஜி ஸ்மார்ட்போனை வெளியிடும் போட்டியில் இன்பினிக்ஸ் தனது புதிய Infinix Hot 30 5G ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.



இந்தியாவில் 5ஜி அறிமுகப்படுத்தப்பட்டது முதலாக 5ஜி ஸ்மார்ட்போன்களின் விற்பனையும் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்களை வெளியிடுவதில் முன்னணி நிறுவனங்கள் போட்டிப் போட்டு வருகின்றன.

அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள புதிய Infinix Hot 30 5G சிறப்பம்சங்கள் பட்ஜெட் விலையில் கவரும் வகையில் உள்ளது.

Infinix Hot 30 5G ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:

6.78 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
2.2 GHz ஆக்டாகோர் ப்ராசஸர்
மீடியாடெக் டைமென்சிட்டி 6020 சிப்செட்
ஆண்ட்ராய்டு 13
4 ஜிபி/8 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம்
128 ஜிபி இண்டெர்னல் மெமரி
1 TB வரை நீட்டிக்கக்கூடிய மெமரி கார்ட் ஸ்லாட்
50 எம்.பி டூவல் ப்ரைமரி கேமரா
8 எம்.பி செல்பி கேமரா
6000 mAh பேட்டரி
18W பாஸ்ட் சார்ஜிங்

இந்த Infinix Hot 30 5G ஸ்மார்ட்போன் அரோரா ப்ளூ, நைட் ப்ளாக் ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது.

இந்த Infinix Hot 30 5G ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை ரூ.12,499 ஆகவும், 8 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை ரூ.13,499 ஆகவும் உள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மக்களவை தேர்தலில் 330 இடங்களில் பாஜக கூட்டணி வெல்லும்: டெல்லியில் எடப்பாடி பழனிசாமி பேட்டி