Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

3 வருஷத்திற்கு அப்டேட்.. 4 வருஷத்திற்கு செக்யூரிட்டி! – தடாலடியாக களம் இறங்கிய OPPO Reno 10 Series!

Advertiesment
oppo reno 10 pro
, திங்கள், 10 ஜூலை 2023 (15:31 IST)
பிரபலமான ஓப்போ நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாடலான OPPO Reno 10 Series ஸ்மார்ட்போன்கள் இன்று இந்தியாவில் வெளியாகியுள்ளன.



இந்தியாவில் பிரபலமாக உள்ள ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஓப்போ நிறுவனமும் ஒன்று. தற்போது 5ஜி தொழில்நுட்பத்துடன் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட புதிய OPPO Reno 10 மற்றும் OPPO Reno 10 Pro ஆகிய இரண்டு மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது ஒப்போ நிறுவனம்.

OPPO Reno 10 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:

webdunia

  • 6.74 ஃபுல் ஹெச்டி அமோலெட் டிஸ்ப்ளே
  • 120 Hz ரெப்ரெஷ் ரேட்
  • மீடியாடெக் டைமென்சிட்டி 7050 சிப்செட்
  • 64 எம்பி + 32 எம்பி + 8 எம்பி ட்ரிப்பிள் ப்ரைமரி கேமரா
  • 32 எம்பி முன்பக்க செல்பி கேமரா
  • 8 ஜிபி ரேம்
  • 256 ஜிபி இண்டெர்னல் மெமரி
  • 5000 mAh பேட்டரி, 67W SUPERVOOC ஃபாஸ்ட் சார்ஜிங்

இந்த OPPO Reno 10 ஸ்மார்ட்போன் ஐஸ் ப்ளூ, சில்வர் க்ரே ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் விலை ஜூலை 20ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

OPPO Reno 10 Pro ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:

webdunia

  • 6.74 ஃபுல் ஹெச்டி அமோலெட் கர்வ்ட் டிஸ்ப்ளே
  • 120 Hz ரெப்ரெஷ் ரேட்
  • குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 778G
  • 12 ஜிபி ரேம்
  • 256 ஜிபி இண்டெர்னல் மெமரி
  • 50 எம்பி + 32 எம்பி + 8 எம்பி ட்ரிப்பிள் ப்ரைமரி கேமரா
  • 32 எம்.பி செல்பி கேமரா
  • 4600 mAh பேட்டரி, 80W SUPERVOOC பாஸ்ட் சார்ஜிங்

இந்த OPPO Reno 10 Pro க்ளோசி பர்ப்பிள், சில்வரி க்ரே ஆகிய இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.39,999.

இந்த OPPO Reno 10 Series மாடல்களில் Sony Flagship IMX709, Sony Flagship IMX890 கேமரா சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளதால் புகைப்படங்கள் மிக துல்லியமாகவும், கலர் க்ளாரிட்டியாகவும் இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் OPPO Reno 10 Series மாடல்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்களும், 4 வருடங்களுக்கு செக்யூரிட்டி பேட்ச்களும் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மேட்ரிமோனியல் மூலம் 15 பெண்களை ஏமாற்றி திருமணம்: 4 குழந்தைகளின் தந்தை கைது..!