Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கேமராவா.. கேமிங்கா..? OnePlus Nord 3 Vs iQOO Neo 7 Pro! – எது பெஸ்ட்?

Oneplus Vs iQOO
, வெள்ளி, 7 ஜூலை 2023 (11:43 IST)
இந்த மாதத்தில் அடுத்தடுத்து பல புதிய ஸ்மார்ட்போன்கள் வெளியாகி வருகின்றன. இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்ப்ளஸ் மற்றும் ஐக்கூ ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் மற்றும் வித்தியாசம் குறித்து பார்ப்போம்.



இந்த ஜூலை மாதம் தொடங்கியது முதலாக தினம்தோறும் ஒரு 5ஜி ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமாகி வருகிறது. அந்த வகையில் இந்த மாதத்தில் வெளியான ஸ்மார்ட்போன்களில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள் OnePlus Nord 3 மற்றும் iQOO Neo 7 Pro.

ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு பொதுவாகவே இந்திய பயனாளர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. iQOO நிறுவனம் கேம் பிரியர்களை டார்கெட் செய்து தனது புதிய iQOO Neo 7 Pro ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

webdunia


iQOO Neo 7 Pro மாடலில் 6.78 இன்ச் OLED டிஸ்ப்ளே உள்ளது. OnePlus Nord 3ல் 6.74 இன்ச் ஓலெட் டிஸ்ப்ளே உள்ளது. OnePlus Nord 3 புதிய டைமென்சிட்டி 9000 சிப்செட்டில் இயங்குகிறது. iQOO Neo 7 Pro மாடல் ஸ்னாப்ட்ராகன் 8+ ஜென் 1 சிப்செட்டில் இயங்குகிறது. ஆனால் iQOO Neo 7 Pro-ல் கேமிங் வசதிகளை சிறப்பாக வழங்குவதற்காகவே கூடுதலாக Independent Gaming Chip அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கேமிங்கிற்கு iQOO Neo 7 Pro சிறந்த ஒரு தேர்வாக இருக்கும்.

கேமரா தரத்தில் OnePlus Nord 3 மற்றும் iQOO Neo 7 Pro இரண்டு மாடல்களுமே 50 எம்பி + 8 எம்.பி + 2 எம்பி ப்ரைமரி ட்ரிப்பிள் கேமராவை கொண்டுள்ளன. iQOO Neo 7 Pro மாடலின் கேமரா OIS சிப்செட்டை கொண்டுள்ளது. ஆனால் ஒன்ப்ளஸ் சோனியின் IMX890 கேமரா சிப்செட்டை கொண்டுள்ளது. அதனால் குறைந்த ஒளியிலும் துல்லியமான படங்களை எடுக்க முடியும். படத்தின் தரமும் மிக தெளிவாகவும் இருக்கும்.

webdunia


கேமிங் பயன்பாட்டிற்காக ஸ்மார்ட்போன் வாங்க நினைப்பவர்களுக்கு iQOO Neo 7 Pro சிறப்பான செயல்பாட்டை வழங்கும். கேமராவும் அதில் சிறப்பாகவே உள்ளது. ப்ராண்ட் மற்றும் சிறந்த User Experience விரும்புபவர்கள் OnePlus Nord 3 முயன்று பார்க்கலாம்.

OnePlus Nord 3 மாடலின் 8 ஜிபி + 128 ஜிபி வேரியண்டின் விலை ரூ.33,999ஆக உள்ளது.  iQOO Neo 7 Proன் 8 ஜிபி + 128 ஜிபி வேரியண்டின் விலை ரூ.34,999ஆக உள்ளது

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு.. தள்ளுபடி செய்தது குஜராத் உயர்நீதிமன்றம்