Honor நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான Honor X7c இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன், அதன் நீண்ட நேரம் நீடிக்கும் பேட்டரி திறன் மற்றும் மேம்பட்ட அம்சங்களுக்காக பெரிதும் பேசப்படுகிறது. இது ஆகஸ்ட் 20 முதல் Honor விற்பனை நிலையங்களிலும், ஆன்லைன் தளங்களிலும் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும்.
Honor X7c ஸ்மார்ட்போன் அலுமினியம் சிலிகேட் உலோகத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இது நீர் மற்றும் தூசுகளிலிருந்து பாதுகாக்கும் IP64 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சம் அதன் பேட்டரிதான். இதில், 5200mAh பேட்டரி திறன் வழங்கப்பட்டுள்ளது. இதை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், 46 மணிநேரம் தொடர்ந்து பேசலாம் அல்லது 59 மணிநேரம் பாடல்களை கேட்கலாம். அதுமட்டுமின்றி, பேட்டரி சார்ஜ் 2% மட்டுமே இருக்கும்போது கூட, 75 நிமிடங்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என்பது இதன் அல்ட்ரா பவர் சேவிங் அம்சத்தின் சிறப்பம்சமாகும். 35W வேகமான சார்ஜிங் வசதியும் இதில் உண்டு.
இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 4 இரண்டாம் தலைமுறை பிராசஸரை கொண்டுள்ளது. இது மேஜிக் OS 8.0 இயங்குதளத்தில் செயல்படுகிறது. 8GB ரேம் மேலும் 8GB விர்ச்சுவல் ரேம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த ரேம் திறன் 16GB ஆகும்.
இந்த ஸ்மார்ட்போனில் பின்புறத்தில் 50MP முதன்மை கேமரா மற்றும் 2MP டெப்த் கேமரா ஆகியவை உள்ளன. இது 8 மடங்கு வரை ஜூம் செய்யும் திறன் கொண்டது. செல்ஃபி எடுக்க, முன்புறத்தில் 5MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பச்சை மற்றும் வெள்ளை ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது.