கூகுள் அறிமுகம் செய்த புதிய குரூப் கால் வசதி !

சனி, 27 ஜூன் 2020 (20:56 IST)
உலகில் பிரசித்தி பெற்ற கூகுள் இணையதளம் தனது கூகுள் டுயோ கூகுள் மீடி சேவைகளில் குரூப் கால் செய்யும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.

சீனாவில் இருந்து உலக நாடுகளுக்குக் கொரோனா பரவத் தொடங்கியதும் பெரும்பாலான ஐடி, தொழில்நுட்ப  நிறுவனங்கள் வீட்டில் இருந்தபடி தங்கள் பணியாளர்களை வேலை செய்யச் சொல்லி வருகின்றனர்.

இந்நிலையில், நிறுவனத்தில் ஆலோசனை செய்ய , கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் ஜூம் போன்ற ஸ்கைப் போன்ற வீடியோ கான்ப்ரன்சிங் மூலம பேசி வந்தனர்.

இந்நிலையில், கூகுள் நிறுவனம் தனது டுயோ, மீட் மற்றும் நெஸ்ட் ஹப் மேக்ஸ் உள்ளிட்ட சேவைகளில் குரூப் கால் மேற்கொள்ளும் வசதியை வழங்குவதாக அறிவித்துள்ளது.

ஆனால்,இந்த வசதியில் ஒருவருடன் மட்டுமே வீடியோ கால் செய்ய முடியும்

மேலும் நெஸ்ட் ஹப் என்ற சாதனத்தில் கூகுள் டுயோ கொண்டு வீடியோ கால் மேற்கொள்வோர் முதலில் கூகுள் டுயோ செயலியில் குரூப் ஒன்றை உருவாக்குவார். அதில், நபர்களை சேர்க்கும்போது, ஹப் மேக்சிட “Hey Google, make a group call” என தெரிவித்தால் சாதனத்தில் தானாக குரூப் கால் மேற்கொள்ளத் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுளின் இந்த குரூப் கால் வசதியை எல்ஜி எக்ஸ்பூம் ஏஐ தின்க் டபிள்யூகே9 ஸ்மார்ட் டிஸ்ப்ளே, ஜெபிஎள் லின்க் வியூ மற்றும் லெனோவோ 8 இன்ச், மற்றும் 10 இன்ச் ஸ்மார்ட் டிஸ்ப்ளேக்களில் மட்டும்தான் பயன்ப்படுத்தமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் சிதம்பரம் நடராஜர் கோவில் தேர்த்திருவிழா ரத்து…