Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதல்முறையாக உடையாத Damage Proof armour பாடியுடன்..! - OPPO A3 Pro 5G சிறப்பம்சங்கள்!

OPPO A3 Pro 5G

Prasanth Karthick

, வியாழன், 27 ஜூன் 2024 (11:26 IST)

ஒப்போ ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் புதிய OPPO A3 Pro 5G முதன்முறையாக எளிதில் உடையாத ஆர்மர் பாடியுடன் வெளியாகியுள்ளது.

உலக அளவில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வரும் நிறுவனங்களில் ஓப்போ நிறுவனமும் ஒன்று. தற்போது ஓப்போ நிறுவனம் தனது புதிய OPPO A3 Pro 5G ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் முதல்முறையாக எளிதில் உடைந்துவிடாத அளவு Damage Proof armour-ஐ ஓப்போ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

OPPO A3 Pro 5G ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:

6.67 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே

மீடியாடெக் டைமென்சிட்டி 6300 சிப்செட்

2.4 GHz ஆக்டாகோர் ப்ராசஸர்

டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம்

128 ஜிபி / 256 ஜிபி இண்டெர்னல் மெமரி + மெமரி கார்டு ஸ்லாட் வசதி

50 எம்பி + 2 எம்பி டூவல் ப்ரைமரி கேமரா

8 எம்பி முன்பக்க செல்பி கேமரா

4ஜி, 5ஜி, ப்ளூடூத், வைஃபை, யூஎஸ்பி டைப்-சி

5100 mAh பேட்டரி, 45W SUPERVOOC சார்ஜிங்

இந்த OPPO A3 Pro 5G ஸ்மார்ட்போன் Starry Black, Moonlight Purple ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8ஜிபி+128ஜிபி மாடலின் விலை ரூ.17,999 ஆகவும், 8ஜிபி+256ஜிபி மாடலின் விலை ரூ.19,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து ஒன்றிய தலைவர் உட்பட கவுன்சிலர்கள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு