Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து ஒன்றிய தலைவர் உட்பட கவுன்சிலர்கள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு

வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து ஒன்றிய தலைவர் உட்பட கவுன்சிலர்கள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு

J.Durai

, வியாழன், 27 ஜூன் 2024 (11:24 IST)
காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் 45 ஊராட்சிகள் உள்ளன. இப்பகுதியில் 19 கவுன்சிலர்கள் பதவி வகித்து வரும் நிலையில் ஒன்றிய பெருந்தலைவராக அதிமுகவை சேர்ந்த ராஜேஸ்வரியும், துனை தலைவராக பா.ஜ.கவை சேர்ந்த ராஜா என்பவரும் திமுகவை சேர்ந்த 8 கவுன்சிலர்களும் பதவி வகித்து வருகின்றனர். 
 
இங்கு வட்டார வளர்ச்சி அலுவலராக உமாராணி என்பவர் பணிபுரிந்து வரும் நிலையில் இவர் ஒன்றியங்களுக்கு அரசிடம் இருந்து நலத்திட்டங்களுக்காக முறையாக நிதி பெற்று தரவில்லை என்றும் இதனால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே குற்றச்சாட்டு இருந்த நிலையில் இன்று காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்த கூட்டரங்கில் சாதாரன கவுன்சில் கூட்டம் தலைவர் புவனேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. 
 
இதில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி முடிந்தவுடனேயே முறையாக நிதி பெற்று தராத வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்தும், அன்மையில் ஒதுக்கிய 80 லட்சம் நிதியை கவுன்சிலர்கள் ஒப்புதல் இன்றி முறைகேடாக பயன்படுத்தியதை கண்டித்துன் தலைவர், துனை தலைவர், திமுக கவுன்சிலர்கள் உட்பட அனைவரும் கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறி வெளிநடப்பு செய்ததுடன் ஒன்றிய அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.  
 
ஒன்றிய கவுன்சில் கூட்டத்தை வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து தலைவர் திமுக கவுன்சிலர்கள் உட்பட அனைவரும் வெளிநடப்பு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓசூரில் சர்வதேச விமான நிலையம்: சட்ட பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!