Publish Date: Tue, 26 Oct 2021 (11:01 IST)
Updated Date: Tue, 26 Oct 2021 (14:49 IST)
நடப்பு ஆண்டின் மூன்றாவது காலாண்டில் ஃபேஸ்புக் நிறுவனம் 900 (சுமார் 68,000 கோடி இந்திய ரூபாய்) கோடி அமெரிக்க டாலர் லாபம் ஈட்டியுள்ளது.
கடந்த ஆண்டு இதே காலாண்டில் இந்த லாபம் 780 கோடி அமெரிக்க டாலராக இருந்தது. அமெரிக்காவுக்கு வெளியே உள்ள நாடுகளின் ஃபேஸ்புக் மூலம் பரவும் போலிச் செய்திகள், பாலியல் தொழிலுக்காக நடக்கும் கடத்தல்கள் குறித்த செய்திகளைக் கட்டுப்படுத்த அந்த நிறுவனம் போதுமான நடவடிக்கை எடுப்பதில்லை என்று முன்னாள் ஊழியர் ஒருவர் முன்வைத்த குற்றச்சாட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்பார்த்த அளவைவிட அதிகம் லாபமீட்டியுள்ளது ஃபேஸ்புக்.