Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கேம் விளையாடலைன்னாலும் வேடிக்கை பாப்போம்! – பேஸ்புக் லைவ் கேம்ஸில் எகிறிய பார்வையாளர்கள்!

Advertiesment
World
, வியாழன், 21 அக்டோபர் 2021 (09:37 IST)
பேஸ்புக் லைவ் கேம்ஸில் விளையாட்டுகளை பார்க்கும் பார்வையாளர்கள் எண்ணிக்கை பல மடங்கு கூடியிருப்பதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதிலும் தொழில்நுட்ப வளர்ச்சியால் வீடியோ கேம்களும், அதை விளையாடுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சிறுவர்கள், இளைஞர்கள் கேம் மோகத்தால் பாதிக்கப்படுவதால் பல நாடுகளில் சில கேம்களுக்கு தடை மற்றும் விளையாடும் நேரக்கட்டுப்பாடு ஆகியவையும் அமலில் உள்ளன.

கேம் விளையாடுபவர்கள் ஒருபக்கம் இருக்க கேம் விளையாடுவதை வேடிக்கை பார்க்கவே ஒரு கூட்டம் சமூக வலைதளங்களில் கூடி வருகிறது. பேஸ்புக் லைவ் கேம்ஸ் என்ற வசதியில் மற்ற நபர் கேம்கள் விளையாடுவதை லைவாக பார்க்க முடியும். பலர் இதில் சென்று கேண்டி க்ரஸ், டாம் ரைடர் உள்ளிட்ட பல கேம்களை தினமும் பார்த்து வருகிறார்களாம். கடந்த 2 மாதத்தில் பேஸ்புக் நேரலையில் கேம் பார்ப்பவர்கள் எண்ணிக்கை 530% உயர்ந்திருப்பதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் மாதம் ஒன்றிற்கு 20 கோடி பேர் கேம் விளையாட்டுகளை பார்ப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வைகோ மகனுக்கு பொறுப்பு: எதிர்ப்பு தெரிவித்து முக்கிய பிரமுகர் ராஜினாமா!