Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாட்ஸ் ஆப் மூலம் டிஜி லாக்கரை பயன்படுத்துவது எப்படி?

வாட்ஸ் ஆப் மூலம் டிஜி லாக்கரை பயன்படுத்துவது எப்படி?
, செவ்வாய், 24 மே 2022 (13:38 IST)
டிஜி லாக்கர் வசதியை இனி மேல் வாட்ஸ் ஆப் மூலம் பெறலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை எப்படி பயன்படுத்துவது என தெரிந்துக்கொள்ளுங்கள்... 

 
வாட்ஸ் ஆப் மூலம் டிஜி லாக்கர் சேவையை பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் டிஜி லாக்கர் கணக்கை உருவாக்குவது, உள் நுழைவது, குறிப்பிட்ட ஆவணங்களை தரவிறக்குவது ஆகிய சேவைகளை வாட்ஸ் ஆப் மூலமே செய்யலாம்.
 
இனி பேன் கார்டு, ஓட்டுநர் உரிமம், சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ், வாகன பதிவு சான்றிதழ், இரு சக்கர வண்டி காப்பீடு, 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், காப்பீட்டுக் கொள்கை ஆவணம் ஆகிய இந்த 8 டிஜி லாக்கர் ஆவணங்களை வாட்ஸ் ஆப் மூலம் பெறமுடியும். 
 
வாட்ஸ் ஆப் மூலம் டிஜி லாக்கரை பயன்படுத்துவது எப்படி?
1. பயனர்கள் 'ஹாய் அல்லது `நமஸ்தே` அல்லது டிஜிலாக்கர்' என்ற செய்தியை, "9013151515" என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அனுப்ப வேண்டும்.
 
2. உங்களுக்கு டிஜிலாக்கர் சேவைகள் வேண்டுமா என்ற கேள்விகளுக்கு பதிலளித்து வேண்டிய சேவையை பெற முடியும்.
 
3. டிஜி லாக்கரில் உங்களுக்கு ஏற்கனேவே கணக்கு இருந்தால், அந்தக் கணக்கில் இருந்து பான் கார்டு, ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ் போன்றவற்றின் பட்டியலை வாட்சாப்பில் பெறுவீர்கள்.
 
4. இதிலிருந்து வேண்டியவற்றை தேர்வு செய்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

4 மாவட்டங்களில் கொரோனா; சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை!