Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்த ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ் ஆப் சேவை நிறுத்தமா?

இந்த ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ் ஆப் சேவை நிறுத்தமா?
, திங்கள், 23 மே 2022 (11:26 IST)
வாட்ஸ் ஆப் ஆதரவை சில ஐபோன் மாடல்களுக்கு நிறுத்த மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது. 

 
அதாவது, புதுப்பிக்கப்படாத மாடல்களில் வாட்ஸ் ஆப் விரைவில் நிறுத்தப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. வாட்ஸ் ஆப் செயலியை பேஸ்புக் நிறுவனம் வாங்கியதிலிருந்து பல புது புது அப்டேட்டுகள் வந்த வண்ணம் உள்ளன. புது அம்சங்கள் பழைய ஓ.எஸ். கொண்ட சாதனங்களில் இயங்காமல் போகும் என்பதால் பழைய ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். சாதனங்களில் வாட்ஸ் ஆப் இயங்குவதற்கான சப்போர்ட் நீக்கப்பட்டு வருகிறது. 
 
அந்த வகையில் தற்போது ஐ.ஓ.எஸ். 10 மற்றும் ஐ.ஓ.எஸ். 11 கொண்டு இயங்கி வரும் ஐபோன் 5 மற்றும் ஐபோன் 5C மாடல்களுக்கான சப்போர்ட் அடுத்த சில மாதங்களில் நிறுத்தப்பட இருக்கிறது. ஆம், வாட்ஸ் ஆப் சேவை அக்டோபர் 24, 2022 முதல் நிறுத்தப்பட்டு விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் ஐபோன் 5S, ஐபோன் 6 அல்லது ஐபோன் 6S போன்ற மாடல்களில் வாட்ஸ் ஆப் செயலியை தொடர்ந்து பயன்படுத்த ஐ.ஓ.எஸ். 12 தளத்திற்கு அப்டேட் செய்ய வேண்டும் எனவும் தெரியவந்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழக எம்.பி தேர்தல்; நாளை முதல் வேட்புமனு தாக்கல்!