Publish Date: Tue, 13 Apr 2021 (08:18 IST)
Updated Date: Tue, 13 Apr 2021 (08:21 IST)
நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் நடந்து வரும் நிலையில் முதலாவது வெற்றியை பெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில் நேற்று முன்தினம் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியும் மோதிக் கொண்டன.
இந்த போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தியது. தனது முதல் வெற்றியை பதிவு செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் ட்விட்டரில் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதில் அஷ்வின், ரிஷப் பண்ட், ஷிகர் தவான் உள்ளிட்ட டெல்லி வீரர்கள் அனைவரும் உற்சாகமாக ஆடும் நிலையில் இந்த வீடியோ வைரலாகியுள்ளது.
Prasanth Karthick
Publish Date: Tue, 13 Apr 2021 (08:18 IST)
Updated Date: Tue, 13 Apr 2021 (08:21 IST)