Publish Date: Wed, 07 Apr 2021 (14:02 IST)
Updated Date: Wed, 07 Apr 2021 (14:03 IST)
பண்ட் டெல்லி அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றது குறித்து முன்னாள் கேப்டன் கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.
எல்லா சீசன்களிலும் கடைசி அணியாக வந்து கொண்டிருந்த டெல்லி அணி கடந்த சீசனில் இறுதிப் போட்டிவரை சென்றது. அதற்கு முக்கியக் காரணம் அந்த அணியில் புதிய இளம் வீரர்கள் புகுத்த்தப்பட்டது, ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன் பதவியை ஏற்றதும்தான். அந்த அளவுக்கு சிறப்பாக அணியை வழிநடத்தினார் ஸ்ரேயாஸ்.
இந்நிலையில் இந்த ஆண்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இருந்து அவர் ஐபிஎல் தொடர் முழுவதும் நீக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அவர் பீல்டிங்கின் போது காயமடைந்தார். தோள்பட்டையில் எலும்பு இடம் மாறியதால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. இதனால் அவர் சில மாதங்களுக்கு ஓய்வு எடுக்க வேண்டியுள்ளது. ஸ்ரேயாஸின் நீக்கம் டெல்லி அணிக்கு மிகபெரும் பின்னடைவாக இருக்கும் என்று சொல்லப்பட்ட நிலையில் சமீபகாலமாக சிறப்பாக செயல்பட்டு வரும் ரிஷப் பண்ட் கேப்டனாக்கப்பட்டார்.
இந்நிலையில் பண்ட்டின் கேப்டன்சி குறித்து முன்னாள் இந்திய கேப்டன் பண்ட்டின் தலைமையில் அணி வெற்றி பெற 25 சதவீதம் வாய்ப்பு உள்ளது. அவர் சிறந்த வீரர்தான். ஆனால் சிறந்த கேப்டனாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. எனக் கூறியுள்ளார்.