Publish Date: Sun, 11 Apr 2021 (10:41 IST)
Updated Date: Sun, 11 Apr 2021 (10:43 IST)
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் பந்துவீச்சில் தாமதம் செய்ததாக சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டிகள் தொடங்கி விருவிருப்பாக நடந்து வரும் நிலையில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதிக் கொண்டன. முதலாவதாக பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில் இரண்டாவதாக களம் இறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பிரமாதமாக விளையாடி 19வது ஓவருக்குள்ளேயே 3 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்களை குவித்து வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் பேட்டிங் செய்தபோது சிஎஸ்கே அணி பந்து வீசுவதில் நேர விரயம் செய்ததாக குற்றம்சாட்டியுள்ள ஐபிஎல் நிர்வாகம் அணி கேப்டன் தோனிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்துள்ளது.