350 சிக்ஸர்கள் விளாசி க்ரிஸ் கெயில் சாதனை! – ஐபிஎல்லில் தொடர்ந்து முதலிடம்!

Webdunia
செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (08:53 IST)
தென் ஆப்பிரிக்க வீரரான கிறிஸ் கெயில் நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் அடித்த சிக்ஸர்கள் மூலம் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரராக சாதனை புரிந்துள்ளார்.

நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்கி பரபரப்பாக நடந்து வரும் நிலையில் நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிக்கொண்டன. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 221 ரன்களை குவித்தது.

இந்த ரன் ரேட்டை சேஸ் செய்த ராஜஸ்தான் அனி 217 ரன்களில் தோல்வியை தழுவியது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய க்றிஸ் கெயில் 28 பந்துகளில் 4 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் விளாசி 40 ரன்கள் குவித்தார்.

முந்தைய ஐபிஎல் சீசனில் 349 சிக்ஸர்கள் மொத்தமாக அடித்து வீழ்த்திய நிலையில் நேற்றைய ஆட்டத்தின் இரண்டு சிக்ஸர்களோடு மொத்தம் 351 சிக்ஸர்கள் விளாசி ஐபிஎல்லில் அதிகமான சிக்ஸர்கள் அடித்த வீரராக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சஞ்சு வந்தாச்சு… அப்போ அடுத்த சீசன்தான் ‘one last time’-ஆ… ரசிகர்கள் சோகம்!

வணக்கம் சஞ்சு… டிரேடிங்கை அதிகாரப்பூர்வமாக அறிவித்த சிஎஸ்கே!

32 பந்துகளில் சதம்.. நிறுத்த முடியாத காட்டாற்று வெள்ளமாக வைபவ் சூர்யவன்ஷி!

RCB அணியில் இந்த வீர்ரகள் எல்லாம் விடுவிக்கப்படவுள்ளார்களா?

சி எஸ் கே அணியில் இருந்து இவர்கள் எல்லாம் கழட்டிவிடப்படுகிறார்களா?... பரவும் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments