Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

3வது அம்பயர் தூக்கு போட்டு செத்துருவான்: தோனி ரன் அவுட்டால் கதறும் சிறுவன்!

Advertiesment
3வது அம்பயர் தூக்கு போட்டு செத்துருவான்: தோனி ரன் அவுட்டால் கதறும் சிறுவன்!
, திங்கள், 13 மே 2019 (13:25 IST)
நேற்றைய ஐபிஎல் இறுதிப்போட்டியில் தோனிக்கு அவுட் கொடுத்ததால் கடுப்பான சிறுவன் 3வது அம்பயருக்கு சாபம்விடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 
 
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் இறுதி போட்டியில் சிஎஸ்கே அணியை மும்பை அணி ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. 2013, 2015, 2017 மற்றும் 2019 என நான்கு முறை மும்பை அணி கோப்பையை வென்றது. 
 
நேற்று நடைபெற்ற போட்டியில் தோனியின் ரன் அவுட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் 3வது அம்பயர் கொடுத்த தீர்ப்பு தவறானது என ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். இப்படியிருக்க சென்னை அணி தோற்றுவிட்டதால் சிறுவன் ஒருவன் போர்வையை போர்த்திக்கொண்டு அழும் வீடியோ வைரலாகியுள்ளது. 
webdunia
அதிலும் தோனிக்கு அவுட் கொடுத்த 3வது அம்பயரை திட்டியும் உள்ளான். அந்த வீடியோவில் அச்சிறுவன் பேசியிருப்பதாவது, தோனி அவுட்டே இல்லை, சும்மானா அவுட்டு கொடுக்கறான். அந்த மூனாவது அம்பயர் தூக்கு மாட்டி செத்துடுவான் என்று பேசுகிறார். இதோ அந்த வீடியோ... 
 

நன்றி: CSK Champions

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎல் 2019: யார் யாருக்கு என்னென்ன விருது? பரிசு தொகை எவ்வளவு? முழு விவரம்!!