Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐபிஎல் 2019: யார் யாருக்கு என்னென்ன விருது? பரிசு தொகை எவ்வளவு? முழு விவரம்!!

Advertiesment
ஐபிஎல் 2019: யார் யாருக்கு என்னென்ன விருது? பரிசு தொகை எவ்வளவு? முழு விவரம்!!
, திங்கள், 13 மே 2019 (08:38 IST)
ஐபிஎல் 2019 தொடரின் இறுதி போட்டியில் சிஎஸ்கே அணியை மும்பை அணி ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. 
 
இதனால், 2013, 2015, 2017 மற்றும் 2019 என நான்கு முறை மும்பை அணி கோப்பையை வென்றது. நான்கு முறையும் ரோஹித் சர்மாதான் அந்த அணிக்கு கேப்டனாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் வெற்றி பெற்ற அணிக்கும் மற்றும் மூன்று இடங்களை பிடித்த அணிக்கு எவ்வளவு பரிசு தொகை வழங்கப்பட்டது, ஐபிஎல் 2019 சீசனில் வழங்கப்பட்ட மற்ற விருதுகளும், பரிசு தொகையும் யாருக்கு சென்றது என்ற முழு விவரம் பின்வருமாறு... 
webdunia
1. ஃபைனலில், கோப்பை வென்ற மும்பை அணிக்கு ரூ.20 கோடி, 
2. இரண்டாவது இடம் பிடித்த சென்னை அணிக்கு ரூ. 12.5 கோடி,
3. மூன்றாவது மற்றும் நான்காவது இடம் பிடித்த டெல்லி மற்றும்  ஹைதராபாத் அணிக்கு ரூ.10.5 கோடி மற்றும் ரூ. 8.5 கோடி,
4. எமர்ஜிங் வீரர்: சுப்மான் கில் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) ரூ.10 லட்சம், 
5. சிறந்த கேட்ச்: கெய்ரான் போலார்டு (மும்பை இந்தியன்ஸ்) ரூ.10 லட்சம்
6. ஆரஞ்சு கேப்: டேவிட் வார்னர் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்) ரூ. 10 லட்சம்
7. பர்ப்பிள் கேப்: இம்ரான் தாஹிர் (சென்னை சூப்பர் கிங்ஸ்) ரூ.10 லட்சம்
8. மதிப்புமிக்க வீரர் (எம்.வி.பி.,): ஆண்ரே ரசல் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) ரூ. 10 லட்சம் 
9. ஸ்டைலிஸ் வீரர்: கே.எல்.ராகுல் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்) ரூ. 10 லட்சம்
10. சிறந்த அதிரடி வீரர் (எஸ்.யூ.வி, கார்): ஆண்ரே ரசல் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்), 
11. கேம் சேஞ்சர்: ராகுல் சகார் (மும்பை இந்தியன்ஸ்) ரூ. 10 லட்சம். 
12. ஃபேர் ப்ளே விருது: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. 
13. பிட்ச் மற்றும் மைதான விருது: பஞ்சாப் கிரிக்கெட் கூட்டமைப்பு,  ஹைதராபாத் கிரிக்கெட் கூட்டமைப்பு.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வருவோம் அடுத்த வருடம் சூறாவளியாக! தோல்விக்கு பின் இம்ரான் தாஹிர் டுவீட்!