கொரோனாவால் நிறுத்தப்பட்ட எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை எப்போது நடத்துவது என பிசிசிஐ இன்று ஆலோசனை நடத்தகிறது.
2021 ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் தொடங்கிய நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிறுத்தப்பட்டது. இதுவரை 29 போட்டிகள் மட்டும் நடத்தப்பட்ட நிலையில் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
ஆனால் எப்படியாவது மீதி போட்டிகளை நடத்த பிசிசிஐ ஆர்வம் காட்டுகிறது. போட்டிகளில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், கொரோனாவால் நிறுத்தப்பட்ட எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை எப்போது நடத்துவது என பிசிசிஐ இன்று ஆலோசனை நடத்தகிறது.
பிசிசிஐ தலைவர் கங்குலி தலைமையில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் காணொலி மூலம் நடைபெற உள்ளது. 4 அணி வீரர்களுக்கு கொரோனா உறுதியானதால் 14-வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் மே மாதம் 4 முதல் நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.